For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் மற்றும் மருத்துவர்கள் அன்பினால் மீண்டு வந்தேன்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் உருக்கம்!

    |

    சென்னை: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    மக்களின் அன்பினால் திரும்பி வந்தேன் என கமல் புரமோவில் சொன்ன நிலையில், அப்போ மருத்துவத்தால் இல்லையா? என கேள்வி எழுப்புவார்கள் என நிகழ்ச்சியில் பேசி விளக்கம் கொடுத்தார்.

    கமல் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பி வந்தது சந்தோஷம் என நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் கூறியதும் பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    5 சீசன்களாக

    5 சீசன்களாக

    பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை 5 சீசன்களாக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். கமல்ஹாசனின் படங்கள் தொடர்ந்து ரிலீசாகவில்லை என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் அவரை காண்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வருகிறது.

    ஒரு வார ஹோஸ்ட்

    ஒரு வார ஹோஸ்ட்

    கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்தப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், கடைசியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனே கடந்த வாரம் நிகழ்ச்சியை கலர்ஃபுல்லாக நடத்தி சென்றார்.

    திரும்பி வந்த கமல்

    திரும்பி வந்த கமல்

    சனி மற்றும் ஞாயிறு எபிசோடுக்கு பிளாக் மற்றும் ஒயிட் என வித விதமான சேலைகளை கட்டிக் கொண்டு வந்த ரம்யா கிருஷ்ணன் இந்த வாரம் எப்படி வர போகிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் கொரோனாவில் இருந்து குணமான கமல்ஹாசனே ரெஸ்ட் ஏதும் எடுக்காமல் ஷோவை நடத்தி வருகிறார்.

    அன்புதான் காப்பாற்றியது

    அன்புதான் காப்பாற்றியது

    கொரோனாவின் பாதிப்பு முதல் இரு நாட்களுக்கு கடுமையாகவே வாட்டியது. உங்கள் அன்பினால் தான் மீண்டு வந்திருக்கிறேன் என பேசிய கமல். அன்பு காப்பாற்றியது என்றதும் அப்போ மருந்து காப்பாத்தலையா பகுத்தறிவாளரே என கேட்பார்கள். மருந்துகளை கடந்து மக்கள் மற்றும் மருத்துவரின் அன்பு தான் காப்பாற்றியது என கலக்கலாக பேசி ரசிகர்களுக்கு நன்றி கூறினார் கமல்.

    சந்தோஷத்தில் ரசிகர்கள்

    சந்தோஷத்தில் ரசிகர்கள்

    கமல் சார் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டனர். உங்கள் உடல் நலன் முழுவதுமாக ஆரோக்கியமாக இருக்கிறதா சார் என ஒரு ரசிகை கேட்க அதான் திரும்பி வந்துட்டேனே நல்லா இருக்கேன் என்றார் கமல்.

    முடியாத ஷூட்டிங்

    முடியாத ஷூட்டிங்

    இந்நேரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறினார் என்கிற சீக்ரெட் கசிந்திருக்கும் ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஷூட்டிங் நாளை காலை தான் நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கமல் சற்று டயார்ட் ஆகி விட்டதால் தான் ஷூட்டிங் நாளை காலை மாற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதே போல வார வாரம் செய்தால் முன்னதாக எவிக்‌ஷன் லீக் ஆகாது பிக் பாஸ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    Kamal Haasan says People Love only save him from Corona Virus in Bigg Boss Tamil 5 this week Saturday episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X