விக்ரம் படத்தை பார்த்து அடிப்பொலி என்று சொன்ன கமல்... கமலின் நண்பர் பகிர்ந்த தகவல்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பான எனர்ஜியுடன் காணப்படுகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நடிப்பில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில், இது 100 சதவிகிதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

கமலின் நடிப்பில் விக்ரம்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசுக்காக மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பு
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் சிறப்பாக இயக்கியுள்ளது ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின் மூலம் தெரியவருகிறது. படத்தை கமல் ரசிகராக அவர் இயக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கதைக்கருவை சொன்ன கமல்
ராஜ்கமல் இன்டர்நேஷனல் முதலில் வேறொரு நடிகரை வைத்து இயக்கவே லோகேஷை அணுகியுள்ளனர். ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கமல்ஹாசனே இந்தப் படத்தில் நடிக்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்கருவை கமல்ஹாசன் கூறியதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் அளித்த சுதந்திரம்
அதை லோகேஷ் நன்றாக டெவலப் செய்து தற்போது படமும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் எந்தவிதத்திலும் தனக்கு நெருக்கடி கொடுக்காமல் முழு சுதந்திரத்தை கமல் அளித்ததாகவும் அதனால்தான் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் லோகேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கமல் அடிப்பொலி என்று பாராட்டு
இந்நிலையில் கமல்ஹாசன் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு அடிப்பொலி என்று பாராட்டு தெரிவித்ததாக அவரது நீண்டகால நண்பரும் எடிட்டருமான மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். கமலிடம் இருந்து இத்தகைய பாராட்டை வாங்குவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

லோகேஷ் வளர்ச்சி குறித்து கமல் மகிழ்ச்சி
மேலும் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த வளர்ச்சி குறித்து கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் லோகேஷுடன் தன்னுடைய கூட்டணி தொடரும் என்று அவர் கூறியதாகவும் மகேஷ் மேலும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
இந்நிலையில் படத்தில் போதைப்பொருளை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விஜய் சேதுபதி போதைப் பொருள் கடத்தல் தலைவனாக நடித்துள்ளதாக தெரிகிறது. பகத் பாசில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கமலின் கேரக்டர் குறித்து சரியாக தெரியவில்லை என்ற போதிலும் அவர் மிரட்டலான நடிப்பை ட்ரெயிலரில் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











