லோகேஷ் அடுத்தப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும்.. யார் சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், நரேன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் படம்.
இந்தப் படம் 15 நாட்களை கடந்துள்ள நிலையில் சர்வதேச அளவில் வசூல் சாதனை செய்துள்ளது.
தற்போது படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற படக்குழு சிறப்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தின் சிறப்பான காட்சி அமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கமலின் தீவிர ரசிகர்
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்தியுள்ளார். அதற்கு ஈடுகொடுத்து கமலும் நடித்துள்ளார். லோகேஷின் இயக்கத்தில் தலையிடாமல் அவர் நடித்துள்ளதாக முன்னதாக பேட்டியில் தெரிவித்திருந்தார்.

வெற்றிக்கான காரணம்
படத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணமாக படத்தின் ஒவ்வொரு
இதையடுத்து படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. சர்வதேச அளவில் சிறப்பான வசூலை செய்து வருகிறது. கடந்த 15 நாட்களில் இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 350 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் மட்டுமே 147 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது.

விக்ரம் சக்சஸ் மீட்
இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை ரேஸ் கோர்சில் நடத்தப்பட்டது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய கமல்ஹாசன் படத்தை வெற்றிப்படமாக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

லோகேஷின் படம் எனது படம்
தொடர்ந்து லோகேஷ் கனகராஜினின் தளபதி 67 படத்தையும் தன்னுடைய படமாகவே தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார். அந்தப் படத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்தப் படத்தை லோகேஷ் வெற்றிப்படமாக்கிவிட்டு மீண்டும் அவர் விக்ரம் 3 படத்தை எடுக்க திரும்ப வேண்டும் என்றும் கமல் கேட்டுக் கொண்டார்.

பிரச்சினையில்லாத ரிலீஸ்
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் கடந்த 10 ஆண்டுகளில் பிரச்சினைகள் எதுவுமில்லாமல் சிறப்பாக வெளியான தன்னுடைய படம் என்றால் அது விக்ரம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். அவரது விஸ்வரூபம் உள்ளிட்ட படங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக கைக்கொடுத்த படம்
நடிகர் கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாராப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தற்போது நடத்தப்பட்டுள்ள சக்சஸ் மீட்டும் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் பேசிய லோகேஷ், இந்த வெற்றி தனக்கான பொறுப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











