எதற்கும் அஞ்சாத துணிச்சல்.. என்னோட சகோதரர் போயிட்டாரே.. விஜயகாந்த் மறைவால் மனம் வாடிய கமல்ஹாசன்!

சென்னை: தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்த காலக்கட்டத்தில் அந்த இருவருக்குமே மிகப்பெரிய சவாலாக மாறியவர் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரேன் வரேன் என சொல்லிக் கொண்டே இருந்த நிலையில், அதிரடியாக களத்தில் குதித்து தேமுதிகாவை திறம்பட முன்னேற்றியவர் விஜயகாந்த். சினிமா மற்றும் அரசியலில் எதற்கும் அஞ்சாத துணிச்சலுடன் சாதித்தவர் எனது சகோதரர் விஜயகாந்த் என கமல்ஹாசன் தனது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயகாந்த். சினிமாவில் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக மாறிய நிலையில், கேப்டன் விஜயகாந்த் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வெடுத்த விஜயகாந்த் இன்று மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

Kamal Haasan sends condolence to Vijayakanth demise

சாலிகிராமத்தில் குவிந்த தொண்டர்கள்: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலையிலேயே சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்களும் தொண்டர்களும் அதிகளவில் கூடி கேப்டனுக்கு என்ன ஆனது என விசாரித்து வந்தனர். சற்றுமுன் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

கமல்ஹாசன் இரங்கல்: "எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். அவரது ரசிகர்களும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X