தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்.. 90 வயது இந்தியன் தாத்தாவின் லுக் எப்படி இருக்கு பாருங்க?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை ஏப்ரல் 14ம் தேதி சொல்லியிருப்பது ரசிகர்களையும் திமுக கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என திமுக கொண்டாடி வரும் நிலையில், ஏப்ரல் 14ம் தேதியை சித்திரை திருநாள் விழாவாக அனுசரித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 14ம் தேதியை தொடர்ந்து தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடி வரும் நிலையில், கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து: "தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் ட்வீட்டுக்கு கீழ் அவரது ரசிகர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஆண்டவரே என பதிவிட்டு வரும் நிலையில், திமுகவினர் கமல்ஹாசனை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

திமுகவினர் தாக்கு: இது தமிழ் புத்தாண்டு கிடையாது என்றும் குரோதி ஆண்டு சமஸ்கிருத மொழியில் வந்தது என்றும் திமுகவினர் கமல்ஹாசனுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். திமுக கூட்டணியில் இருந்துக் கொண்டே சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுற எங்க தலைக்கு தில்ல பார்த்தியா என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியன் 2 லுக்: 90 வயது இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் படத்தின் கிளைமேக்ஸில் சேனாபதி சாகாமல் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருப்பது போல காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். அதிலிருந்து இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்துரு கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்திருப்பார் என தெரிகிறது. இதற்கு முன் வெளியானதை விட சேனாபதியின் செம டெரர் க்ளோஸ் அப் லுக் தற்போது வெளியாகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை இந்தியன் 2 படக்குழுவும் வெளியிட்டுள்ளது.

மெகா ஹிட் அடிக்குமா?: 90 வயது இந்தியன் தாத்தா எதிரிகளை பந்தாடுவது போன்ற காட்சிகள் எந்தளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதே கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. அதையும் தாண்டி ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் மேஜிக் தான் இந்தியன் 2 படத்தை வெற்றிப் படமாக மாற்ற உதவும் என்றும் கூறுகின்றனர். இந்தியன் படத்தை விட மிகப்பெரிய படமாக இந்தியன் 2 வருமா? அல்லது பல பார்ட் 2 தமிழ் படங்கள் போல சொதப்பி விடுமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











