30 நொடி பேசி தேசிய கட்சியை வைத்து விளம்பரம் தேடுவது எப்படி?: கமல் புது டிரெண்ட்

By Siva

Recommended Video

Actress Kasthuri: கமல் 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார்- வீடியோ

சென்னை:கமல் ஹாஸன் தனக்கு அழகு மட்டும் அல்ல அறிவும் அதிகம் தான் என்பதை அரசியலிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மாத்தி யோசிப்பவர் கமல் ஹாஸன். அனைத்தும் தெரிந்த அறிவாளி என்று பெயர் எடுத்த அவர் அரசியலுக்கு வந்துள்ளார். கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுசா கத்துக்கிட்டு வருவான். தாங்க மாட்டீங்க என்று பாரதிராஜா அன்றே தெரிவித்தார்.

அது எல்லாம் உண்மை என்பதை மெதுவாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

தீவிரவாதி

தீவிரவாதி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நாத்திகரான கமல் ஹாஸன் தெரிவித்தார். உடனே ஒரு குறிப்பிட்ட தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். கமல் ஹாஸனை கண்டித்து ட்வீட் போட்டு போட்டே அவருக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் தேசிய அளவில் பெரிய விளம்பரம் தேடிக் கொடுத்துவிட்டனர். அவர்களால் ட்விட்டரில் மட்டும் அல்ல கூகுள் டிரெண்ட்ஸிலும் கமல் ஆதிக்கம் தான்.

கமல்

கமல்

அந்த தேசிய கட்சி இலவச விளம்பரம் செய்த டைமிங் தான் ரொம்ப முக்கியம். தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு விளம்பரம் கிடைக்க கமல் ஹாஸன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோட்சே பற்றி கமல் தெரிந்து பேசினாரோ, தெரியாமல் பேசினாரோ ஆனால் அவர் பேச்சு நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டது.

சர்கார்

சர்கார்

அந்த தேசிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து விஜய்யின் மெர்சல் படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார்கள். சர்கார் படத்திற்கு தமிழக அரசு விளம்பரம் தேடிக் கொடுத்தது. ஒரு அரசியல் கட்சி படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தேசிய கட்சி மாநில கட்சிக்கு இலவச விளம்பரம் செய்ததை தற்போது தான் பார்க்கிறோம்.

சினிமா

சினிமா

சினிமாவில் மட்டும் அல்ல அரசியலிலும் புது டிரெண்டை உருவாக்கியுள்ளார் கமல். இது அவர் தெரியாமல் பேசியதால் கிடைத்த விளம்பரமாக இருந்தாலும் ஏதாவது சர்ச்சையாக பேசினால் குட்டி கட்சியாக இருந்தாலும் தேசிய கட்சி விளம்பரம் தேடிக் கொடுக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X