இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது.. டீமை வழிநடத்தும் ஷங்கர்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் இந்தியன் 2.

இந்தியன் படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து கமல் -இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங் ஒருமாத காலம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியன் படம்

இந்தியன் படம்

கடந்த 1996ம் ஆண்டில் கமல் -ஷங்கர் காம்பினேஷனில் வெளியானது இந்தியன் படம். இந்தப் படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி ஆகியோர் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

சூப்பர் ஹிட்டடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் பூஜையுடன் துவங்கியது. ஆனால் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

மீண்டும் துவங்கிய சூட்டிங்

மீண்டும் துவங்கிய சூட்டிங்

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூசித்தட்டப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார். சென்னை, ஐதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் கமலுடன் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது.

கமல் காட்சிகளை எடுக்கும் ஷங்கர்

கமல் காட்சிகளை எடுக்கும் ஷங்கர்

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சென்னையில் ஒரு மாத காலத்திற்கு சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. பனையூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங்கை நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கமல் இடம்பெறும் காட்சிகளை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

மற்ற நடிகர்களின் காட்சிகளை இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டவர்கள் இயக்கவுள்ளனர். இந்நிலையில் சென்னையில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் இயக்குநர் ஷங்கர் பிரதானமாக காணப்படுகிறார். அவர் படக்குழுவினருக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கூறுவதாக இந்தப் புகைப்படம் காணப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ஆசி15 படம்

ஷங்கர் இயக்கத்தில் ஆசி15 படம்

இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் ஆர்சி 15 படங்களை இயக்கிவருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆர்சி15 படம் வரும் ஜுன் மாதமும் இந்தியன் 2 படம் தீபாவளி ரிலீசாகவும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X