எதிர்பார்க்காத வரலாற்று வெற்றியை பெற்ற தருணம்... 83 படம் குறித்த கமல் பாராட்டு

சென்னை : கடந்த 83ல் இந்தியாவின் உலக கோப்பை வெற்றி குறித்த பதிவாக வெளியாக உள்ளது 83 படம்.

இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. உலக கோப்பை தருணத்தை படமாக பார்க்க அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நனவான உலக கோப்பை கனவு

நனவான உலக கோப்பை கனவு

கடந்த 1983ல் உலக கோப்பை கனவை இந்தியா நனவாக்கிக் கொண்டது. வெஸ்ட் இன்டீசுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிக் கொண்ட வரலாற்று சாதனையை தனதாக்கிக் கொண்டது. அந்த வெற்றியை சாத்தியப்படுத்தினார் அன்றைய இந்திய கேப்டன் கபில்தேவ்.

திரைப்படமான வெற்றித் தருணம்

திரைப்படமான வெற்றித் தருணம்

இந்த வரலாற்றுத் தருணத்தை இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தற்போது திரைப்படமாக்கியுள்ளனர். படத்தில் கபில்தேவ் ரோலில் ரன்வீர் மற்றும் அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளனர். படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

உலக நாயகன் வெளியிட்ட ட்ரெயிலர்

உலக நாயகன் வெளியிட்ட ட்ரெயிலர்

இந்த ட்ரெயிலரை உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் இருந்தபோது வெளியிட்டார். இந்த ட்ரெயிலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. உலக கோப்பை தருணத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

தொடர்ந்து பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் துபாயின் புர்ஜ் கலிபாவில் படத்தின் ட்ரெயிலர் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து படத்தின் பிரமோஷன் பல வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

விளக்கு அணைந்து விட்டால் ஜாதி இல்லை | Kamal-லின் கருத்தை மறுத்த Pa.Ranjith
 படம் குறித்து கமல் பாராட்டு

படம் குறித்து கமல் பாராட்டு

இந்நிலையில் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 1983ல் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த தனது மலரும் நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X