Bhavatharini passed away: இளையராஜாவை எப்படி தேற்றுவேன்.. பவதாரிணி மறைவு.. கமல்ஹாசன் குமுறல்!

சென்னை: சகோதரர் இளையராஜாவை எப்படி தேற்றுவேன் என கமல்ஹாசன் பவதாரிணியின் மறைவு செய்தியை கேட்டு மனம் குமுறியபடி பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இளம் வயதில் இருந்தே இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பயணித்த கமல்ஹாசன் பவதாரிணியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு இசை உலகத்தை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இளையராஜாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Kamal Haasan shares condolence post for Ilayaraja daughter Bhavatharini demise

விஜயகாந்தை தொடர்ந்து: கடந்த டிசம்பர் மாதம் தான் கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. டிசம்பர் 28ம் தேதி விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், ஜனவரி 25ம் தேதி இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சர் பாதிப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த சிறு வயதில் பவதாரிணி உயிரிழந்து விட்டாரே என சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

கதறிய இளையராஜா: இலங்கையில் வைக்கப்பட்டிருந்த மகளின் உடலை காண மருத்துவமனைக்கு நடக்கவே முடியாமல் நடந்து சென்ற இளையராஜா உயிரற்ற உடலாக தனது மகள் இருப்பதை பார்த்து கதறி அழுது விட்டார். அவரது குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லையே என கமல்ஹாசன் பதிவிட்டுள்ள பதிவு தற்போது தீயாக பரவி வருகிறது.

Kamal Haasan shares condolence post for Ilayaraja daughter Bhavatharini demise

கமல்ஹாசன் குமுறல்: "மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்." என உலக நாயகன் கமல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan shares condolence post for Ilayaraja daughter Bhavatharini demise

இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்: இளையராஜாவும் கமல்ஹாசனும் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். கமல்ஹாசனுக்கு ஏகப்பட்ட வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. சிறு வயதில் இருந்தே மகள் பவதாரிணி வளர்வதை பார்த்து வந்த கமல்ஹாசன் அவரது மறைவு செய்தி அறிந்து ரொம்பவே மனமுடைந்து போய் விட்டார். தனது சகோதரர் இளையராஜா நிச்சயம் தனது மகள் மறைவை தாங்கிக் கொள்ள மாட்டார் என நினைத்து அவர் மனதை இழக்காதிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X