அபிஷேக் ராஜாவின் வருகை.. இமான் அண்ணாச்சியின் ரியாக்‌ஷன் இதுதான்.. குறும்பு படம் போட்ட கமல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் வாரத்திலேயே டேஞ்சர் ஸோனுக்கு சென்ற அபிஷேக் இரண்டாவது வாரத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் கமல்ஹாசன் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிகளை லாக்டவுன் காலத்தில் ஜூம் கால் மூலமாக தொகுத்து வழங்கியவர் அபிஷேக் ராஜா.

அங்கே இருந்தே கமலை பின்பற்றி பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் நுழைந்து விட்டார் என்கிற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கிளம்பின.

எவிக்டான அபிஷேக்

எவிக்டான அபிஷேக்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் வாரத்திலேயே டேஞ்சர் ஸோனுக்கு சென்ற அபிஷேக் இரண்டாவது வாரத்தில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்டார். பாவனி உள்ளிட்ட போட்டியாளர்கள் காயின் கொடுத்து காப்பாற்றுகிறோம் எனக் கூறும் போது மக்கள் தீர்ப்பை மதித்து வெளியே போகிறேன் என வெளியேறினார்.

இமயமலை டூர்

இமயமலை டூர்

வெளியே வந்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் போலீசார் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை எல்லாம் மறக்க முடியாது என்றும் கூறினார். மேலும், அப்பாவின் அஸ்தியை கரைக்கவும் மன நிம்மதியடையவும் இமயமலைக்கு டூர் சென்று விட்டு திரும்பினார்.

பிக் பாஸ் பார்க்கல

பிக் பாஸ் பார்க்கல

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோடு கூட முழுதாக பார்த்தது இல்லை என கமல் முன்பாகவே சொன்ன அபிஷேக் ராஜாவை வெளியே அனுப்பி பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுசா பார்த்துட்டு வாங்க என அனுப்பி வைத்து விட்டார்களா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

வனிதாவை போல

வனிதாவை போல

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அத்தனை டெரர் போட்டியாளர்களின் மொத்த உருவம் இந்த அபிஷேக் என ரசிகர்கள் ஜூலி, காயத்ரி, வனிதா விஜயகுமார், மீரா மிதுன் என ஏகப்பட்ட போட்டியாளர்களுடன் கம்பேர் பண்ணிய நிலையில், வனிதா விஜயகுமார் போல மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அபிஷேக் அசத்தல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அண்ணாச்சிக்கு புடிக்கல

அண்ணாச்சிக்கு புடிக்கல

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அபிஷேக் ராஜா உள்ளே வந்திருப்பது இமான் அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ராஜுவுடன் அமர்ந்து கொண்டு பாவனியும், பிரியங்காவும் இந்த அளவுக்கு அவனை தாங்கு தாங்குனு ஏன் தாங்குறாங்க என்றும் அவன் போன போதும் வருத்தப்படல, வந்த போதும் சந்தோஷப்படல எனக் கூறினார்.

குறும்பு படம்

குறும்பு படம்

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் குறும்படம் போட்டு போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் கமல்ஹாசன் இமான் அண்ணாச்சிக்கு குறும்பு படம் போட்டுக் காட்டி அபிஷேக்கிடம் நல்லாவே பற்ற வைத்து விட்டார். அபிஷேக் ராஜா பெட்டியில் இருந்து வெளியே வந்த போது இவன் திரும்பி வந்துட்டானா என ஆவியை பார்த்தது போல இமான் அண்ணாச்சி பயந்த ரியாக்‌ஷனை போட்டுக் காட்டி கலகம் செய்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X