சம்யுக்தாவுக்கு கிளம்பும் போது சரியான சவுக்கடி.. இது குருமா படம் அல்ல 'படம்'. வேற லெவல் கமல்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
சம்யுக்தா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்கிற தகவல் கசிந்து விட்ட நிலையில், இரண்டாவது புரமோவில், சம்யுக்தாவுக்கு கமல் குறும்படம் போட்டுக் காண்பிக்கிறார்.
வளர்ப்பு சரியில்லை என பலமுறை ஆரியை அவதூறாக பேசிய சம்யுக்தா, தன்னோட மதர்ஹுட் பத்தியும் ஆரி தப்பா பேசினான் என ஒருமையில் தாக்கியதற்கு கிளம்பும் போது இருக்கு வேட்டு.

முன்னாள் மாடல்
முன்னாள் மாடல் அழகியான சம்யுக்தா, சீரியல், படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா, ஷிவானி, பாலா பக்கமே அதிக நேரம் செலவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாலாவின் தயவால் கேப்டன் பதவியை பெற்ற சம்யுக்தா, பாலாவின் பப்பட்டாகவும் இருந்து வந்தார்.

ஆரியுடன் பஞ்சாயத்து
சம்யுக்தாவுக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரே எதிரி என்றால் அது ஆரி அர்ஜுனா தான். மத்த எல்லாரும் சம்யுக்தாவை டம்மி மம்மியாக்கி எஸ்கேப் ஆகி வந்த நிலையில், ஆரி சம்யுக்தாவின் குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்ட இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டது. தறுதலை பிரச்சனையின் போது சம்யுக்தாவை பார்த்து அந்த வார்த்தையை நெத்தியில அடிச்சது மாதிரி ஆரி சொல்லியது பெரும் பஞ்சாயத்து ஆனது.

ஒருமையில் திட்றது
ஆரியை பிடிக்காமல் போன சம்யுக்தா அவர் பற்றி மற்றவர்களிடம் ஒருமையில் திட்டத் தொடங்கினார். பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்லாம் வந்துட்டான் பிக் பாஸ் வீட்டுக்கு என்றும், அவன் எப்படி என் மதர்ஹுட்ட கேள்வி கேட்பான், அதெல்லாம் வளர்ப்பு என ஏகப்பட்ட தடவை ஆரியை பற்றி திட்ட ஆரம்பித்தார்.

குருமா படமல்ல படம்
இந்நிலையில், இன்றைய இரண்டாவது புரமோவில் வளர்ப்பு பிரச்சனையை கையில் எடுத்து கமல் பேசினார். ஆரி அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என சம்யுக்தா எஸ்கேப் ஆகும் போது, அவர் உங்களோட மதர்ஹுட் பத்தி பேசவே இல்லாத மாதிரி தான் தெரியுது. இது குறும்படம் அல்ல, அர்ச்சனா சொன்ன மாதிரி குருமா படமல்ல படம் பார்க்கலாமா? என்றார்.

ஆரி ஒருவழி தான் இன்னைக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மை ஜெயிக்கும், தனித்துவம் ஜெயிக்கும் என இதுவரை விளையாடி வரும் ஆரி அந்த வார்த்தையை சொல்லி இருந்தால் ஆரி ஒருவழி தான் இன்னைக்கு என கமல், சும்மா சம்யுக்தாவை சீண்டிப் பார்த்து, சுளுக்கு எடுக்கப் போகிறார் என்பது நல்லாவே தெரிகிறது.

சங்கடத்தில் சம்யுக்தா
கமல் அப்படி சொல்லி குறும்படம் போட ஆரம்பித்ததும், Wasted ஆகிவிட்டார் சம்யுக்தா. போற நேரத்தில இப்படியா பொட்டுல அடிக்கணும் என பிக் பாஸ் ரசிகர்களே பாவம் பார்க்கும் அளவுக்கு சங்கடத்தில் மாட்டிக் கொண்டார் சம்யுக்தா. ஆனால், இந்த குறும்படம் ஆரிக்கு உதவும் என்றும், பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











