பக்காவாக தயாரான கமல்ஹாசன்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே, எப்போது தெரியுமா?
Recommended Video
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
காயம் காரணமாக சில மாதங்கள் இந்தியன் 2 பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் சென்னையில் இந்தியன் 2 பட ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமர்சன ரீதியாக
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றியை குவித்தாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளன.

ஒரே நம்பிக்கை
இந்நிலையில், தனது இயக்கத்தில் தேசிய விருது பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரே நம்பிக்கையுடன் ஷங்கர் கையில் எடுத்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஷங்கருக்கு மிகப்பெரிய ஹிட் மற்றும் பாராட்டுக்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுக்கும்
ஷங்கரை போலவே கமலுக்கும் இந்தியன் 2 படம் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. விஸ்வரூபம் படம் கொடுத்த வெற்றியில் ஒரு பகுதியை கூட விஸ்வரூபம் 2 கொடுக்கவில்லை. இதனால், ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரம்மாண்ட சண்டை காட்சி
குஜராத் மற்றும் குவாலியரில் மிகப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை கடந்த ஆண்டு இறுதியில் ஷங்கர் ஷூட் செய்திருந்தார். 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த சண்டைக் காட்சியில் சுமார் 2000 துணை நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தடைபட்ட ஷூட்டிங்
வேகமாக சென்றுக் கொண்டிருந்த இந்தியன் 2 ஷூட்டிங் கமல்ஹாசன் காலில் பொறுத்தப்பட்டிருந்த பிளாட்டினம் ராடை எடுக்கும் அறுவை சிகிச்சைக்காக சிறிது காலம் தடைபட்டது.

சூப்பரா ரெடியாகிட்டார்
அறுவை சிகிச்சைக்காக சில காலம் ஓய்வில் இருந்த கமல் தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக யங்காகவும், எனர்ஜியுடனும் ரெடியாகி விட்டார்.

அடுத்த ஷெட்யூல்
இந்நிலையில், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கான பிரம்மாண்ட செட்களும் ரெடியாகி வருகிறதாம்.

யார் யார்?
மேலும், சென்னையில் நடைபெற உள்ள ஷூட்டிங்கில் கமல்ஹாசனுடன் நடிகர் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஷூட்டிங் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடைய உள்ளதாம்.

எப்போ ரிலீஸ்?
இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 காலதாமதத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்து அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது குடியரசு தினத்தை குறி வைத்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











