Thug Life Box Office: முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரு வாரத்திற்கே தாக்குபிடிக்காத விண்வெளி நாயகன்.. வசூல் விபரம்

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், வையாபுரி, வடிவுக்கரசி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த வாரம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், படத்தின் முதல் ஒருவார கலெக்‌ஷன் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் படம் தக் லைஃப் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர். படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்பட்டது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போனது. படக்குழுவும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என காத்துக் கொண்டு இருந்தது. ஆனால் படக்குழுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

Kamal Haasan Simbu Maniratnam Thug Life Very Poor Collection One Week Box Office Details
Photo Credit:

ஓவர் பில்டப்: அதாவது படக்குழுவும் ரசிகர்களும் இணையத்தில் விட்ட பில்டப்கள் எல்லாம், வெட்டி பில்டப்கள் அதனால் அம்மஞ்சல்லி பிரயோஜனம் இல்லை என ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு படத்தின் திரைக்கதை இருந்ததால் படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக கிளைமேக்ஸில் சிம்பு இறப்பது போன்ற காட்சிகளை பார்த்த சிம்பு ரசிகர்கள் மணிரத்னத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதெல்லாம் ஒருபுறமிருக்க இசை வெளியீட்டு விழாவில் இடம் பெற்றிருந்த 9 பாடல்களில் ஒரு பாடல் மட்டுமே படத்தில் முழுவதுமாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற முத்தமழை பாடலுக்கான அறிகுறி கூட படத்தில் இல்லாதது பெரும் ஏமாற்றம்.

சொதப்பல் திரைக்கதை: படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்களே படத்தை தூக்கி நிறுத்திய கதாபாத்திரம் இதுதான் என ஒன்றைக் கூட சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு கதாபாத்திர வடிவமைப்பும், திரைக்கதையும் இருந்தது. 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வருகிற மணிரத்னத்தின் படமா இது எனக் கேட்கும் அளவுக்கு படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்தது. இது மணிரத்னத்தின் படம் தான் என்பதற்கு இருந்த ஒரே அடையாளம் என்னவென்றால், வசனங்கள் உவமையாக இருந்ததுதான். ஆனால் படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என எதிலும் மெச்சத்தகுந்த காட்சிகள் என எதுவும் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

Kamal Haasan Simbu Maniratnam Thug Life Very Poor Collection One Week Box Office Details
Photo Credit:

ஒரு வார வசூல்: படத்தின் முதல் நாள் வசூல் என்பதே சுமாராகத்தான் இருந்தது. இந்நிலையில் இன்றுடன் அதாவது ஜூன் 12 ஆம் தேதியுடன் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. இந்த முதல் வாரத்தில் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் சாக்.நிக் வலைதளம் சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் முதல் வாரத்தில், இதுவரை ரூபாய் 42 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வசூல் விபரம் என்பது இந்தியாவில்தான் என்பதும், வெளிநாட்டு வசூலை இதனுடன் சேர்த்தால் கூடுதலாக ரூபாய் 20 கோடிகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது படக்குழுவை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X