»   »  முத்துராமலிங்கம்: முதன்முறையாக இணையும் கமல்- பிரபு- கார்த்திக்.... கவுதம் கார்த்திக்காக!

முத்துராமலிங்கம்: முதன்முறையாக இணையும் கமல்- பிரபு- கார்த்திக்.... கவுதம் கார்த்திக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கடல்' நாயகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் முத்துராமலிங்கம் படத்திற்காக கமல், பிரபு மற்றும் கார்த்திக் மூவரும் இணைகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கார்த்திக், பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா என்று மிகப்பெரிய நட்சத்திரங்கள் முத்துராமலிங்கம் படத்தின் மூலம் இணைகின்றனர்.


Kamal Haasan Sing for Gautham Karthik's Muthuramalingam

இளையராஜாவின் 1002 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.


இந்தப் படத்தின் மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன், பஞ்சு அருணாசலம் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கார்த்திக், பிரபுவைத் தொடர்ந்து நடிகர் கமலும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இளையராஜா இசையில் உருவாகும் பாடல் ஒன்றை இப்படத்திற்காக கமல் பாடவிருக்கிறாராம்.


இதன் மூலம் முதன்முறையாக கமல், பிரபு, கார்த்திக், இளையராஜா மற்றும் பஞ்சு அருணாசலம் இந்த ஐவரும் ஒரே படத்தில் இணைந்திருக்கின்றனர்.


இளையராஜா இசை, கமலின் பின்னணிப் பாடகர் அவதாரம் மற்றும் பஞ்சு அருணாசலம் பாடல்கள் எல்லாம் சேர்ந்து முத்துராமலிங்கம் படத்திற்கு ஒரு புதிய கலரை அளித்திருக்கின்றன.


இதனால் இதுவரையில் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு கவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கம் படத்திற்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது.


கடலில் விழுந்த கவுதம் கார்த்திக்கை முத்துராமலிங்கம் கரை சேர்க்குமா? பார்க்கலாம்.

English summary
Sources Said Actor Kamal Haasan Singing for Gautham Karthik's Muthuramalingam. Veteran Lyricist Panchu Arunachalam Pen the Lyric for the song and Ilaiyaraja Scored the Background Music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil