திருநங்கை ஷிவினை இமிடேட் செய்த அசீம்...லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் கணேஷனைப் போல் இமிடேட் செய்த அசீமை கமல் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

நிகழ்ச்சியில் தற்போது அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா, மணிகண்டன், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, ஷிவின் கணேசன் என 19 பேர் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் 9.30 மணிக்கு விஜய் டிவியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை போல் இல்லாமல் இந்த சீசன் விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

பொம்மை டாஸ்க்

பொம்மை டாஸ்க்

இந்த வாரம் பொம்மை டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசீம் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், குரலை உயர்த்தியும் பேசி தன்னை ஒரு ஹீரோ போல காட்டி வருகிறார்.

கண்டித்த ரசிகர்கள்

கண்டித்த ரசிகர்கள்

டாஸ்கின் போது தனலட்சுமி தள்ளிவிட்டதாக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடந்தது. அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தில் ஷிவினைப் போல் அசீம் இமிடேட் செய்து, அதாவது ஷிவினின் உடல் மொழியை கேலி செய்தார். அதைப்பார்த்து கொதித்துப்போன நெட்டிசன்கள் அசீமை வெளியில் அனுப்ப வேண்டும் என ட்விட்டரில் கண்டனங்களை பதிவு செய்தனர்.

பரபரப்பான எபிசோடு

பரபரப்பான எபிசோடு

இதையடுத்து, நேற்றைய எபிசோடில் ஒரு முடிவுடன் வந்த கமல்ஹாசன் அசீமை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். கமல் கேட்ட பல கேள்விகளுக்கு அசீமால் பதில் சொல்லவே முடியவில்லை. அவர் பதில் சொல்வதை கேட்கவும் கமல் விரும்பவில்லை என்பது நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.

வன்மையாக கண்டிக்கிறேன்

வன்மையாக கண்டிக்கிறேன்

அதோடு, நிற்காமல், அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன் உங்களை பார்த்துதான் உங்களின் மகன் வளருவான் அவனுக்காக கண்டிக்கிறேன். நான் கேலி செய்வேன்,கிண்டல் செய்வேன்,அசிங்கப்படுத்துவேன்,இமிடேட் செய்வேன் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால், மக்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள் என்றார்.

ஷிவினை பாராட்டிய கமல்

ஷிவினை பாராட்டிய கமல்

ஷிவினை நீங்கள் கிண்டலடித்த போதும், கிண்டல் செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான் என்று அவர் எதிர்கொண்டவிதத்தை நான் பாராட்டுகிறேன். ஷிவின் மட்டும் இல்ல இவரை போல வெளியில் இருக்கும் பல சகோதரிகளுக்கும் என்ன மாதிரி ஒரு அண்ணன் இருப்பான் என்று கமல் பேசியது உண்மையில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. அப்போது ஷிவின் கண்கலங்கி மிகவும் நன்றி சார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X