டுபாக்கூர்.. இன்னைக்கு பாலாஜியை வச்சி விளாச போறாரு கமல்.. கடைசியா போட்ட புரமோவ பார்த்தீங்களா?

சென்னை: சனம் ஷெட்டி மாடலாக கலந்து கொண்ட நிகழ்ச்சியை டுபாக்கூர் ஷோ என கிண்டல் அடித்த பாலாஜி முருகதாஸை இன்றைய எபிசோடில் கமல் வெளுத்து வாங்க உள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் வார இறுதிக்கு வந்துவிட்டோம். வழக்கம் போல கமல்ஹாசன் செம கெத்தாக கோட் அணிந்து, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை தனது பாணியில் தட்டியும் திட்டியும் கொடுத்துள்ளார்.

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி பிரச்சனை சப்புன்னு முடிஞ்ச நிலையில், இவங்க பிரச்சனை தான் பெருசா வெடித்து வருகிறது.

புகார் பெட்டி

புகார் பெட்டி

தலைவி ரம்யா பாண்டியன் முதல் ஒவ்வொரு டீமிலும் உள்ள தலைவர்கள் சரியாக செயல்பட்டார்களா? இல்லையா? என புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு பலரும் தங்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். சொல்லிக்கோங்க, சொல்லிக்கோங்க என்ன வேணா சொல்லிக்கோங்க, எனக்கு ஒன்றும் கவலை இல்லை என டோரா புஜ்ஜி மாதிரி ரம்யா பாண்டியன் ஆடியது ரசிகர்களை சிரிக்க வைத்தது.

அனிதா, ரேகாவுக்கு ஹார்ட்

அனிதா, ரேகாவுக்கு ஹார்ட்

வீட்டுக்கு வந்த உடனே முதல் டாஸ்க்காக பிக் பாஸ் ஆரம்பித்த நாரதர் வேலையான புரோக்கன் ஹார்ட் டாஸ்க் வேலையை கமல் மீண்டும் தொடர்ந்தார். சனம் ஷெட்டியை கூப்பிட்டு ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட் கொடுக்க சொன்னார், அனிதா மற்றும் ரேகாவுக்கு சனம் ஹார்ட் கொடுத்தார்.

பாலாஜிக்கு புரோக்கன் ஹார்ட்

பாலாஜிக்கு புரோக்கன் ஹார்ட்

இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், ரேகா, சனம் ஷெட்டி சண்டை எல்லாம் பெருசா இருக்கும் என்று பார்த்தால், அதெல்லாம் சப்புன்னு முடிஞ்சு, கடைசியா வெடித்த பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி சண்டை தான் செம ஹைலைட்டாகவே மாறிவிட்டது. பாலாஜிக்கு முன்னதாக ஹார்ட் கொடுத்த நிலையில் டுபாக்கூர் சண்டையால் புரோக்கன் ஹார்ட் கொடுத்து விட்டார்.

டுபாக்கூர் சண்டை

டுபாக்கூர் சண்டை

மாடல் அழகியான சனம் ஷெட்டி தொகுத்து வழங்கிய ஷோவை டுபாக்கூர் ஷோ என பாலாஜி முருகதாஸ் கழுவி ஊற்றிய நிலையில், இருவருக்கும் மோதல் வெடித்தது. அது குறித்த விளக்கத்தை கமலிடம் சனம் ஷெட்டி சொல்ல, தனது தரப்பு நியாயத்தையும் பாலாஜி முருகதாஸ் கூறினார். ஆனாலும், இன்னைக்கு கமல் பாலாவை வெளுத்து வாங்கப் போவது உறுதி என்றே தெரிகிறது.

சம்யுக்தாவுடன் பெட் ஃபைட்

சம்யுக்தாவுடன் பெட் ஃபைட்

வந்த முதல் நாளில் சாக்லேட் வைத்து இடம் பிடித்ததாக சம்யுக்தாவுடனும் சனம் ஷெட்டி முட்டிக் கொண்டார். சரி அவங்களுக்கு புரோக்கன் ஹார்ட்டை குத்திடுங்க என கமல் கிண்டலடிக்க, சனம் ஷெட்டி புரோக்கன் ஹார்ட்டை குத்தினார். சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் மற்றும் சம்யுக்தா மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு ஊசி குத்தின மாதிரி இருக்கும்

நூறு ஊசி குத்தின மாதிரி இருக்கும்

நேற்று இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் இறுதியில் இன்று நடக்க போகும் தரமான சம்பவம் குறித்த சின்ன புரமோ கடைசியாக போடப்பட்டது. அதில், டுபாக்கூர் என நீங்க சொன்னதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஊசி போட்டுத் தான் நீங்க உடம்பு ஏத்துனீங்கன்னு சொன்னா எப்படி இருக்கும் என கமல் கேட்டு பாலாஜியை வெளுத்து வாங்கினார். அது போலத்தான் அவங்க தொழில் பத்தி நீங்க சொன்னது அவங்களுக்கு நூறு ஊசி குத்தின மாதிரி இருக்கும் என பட்டென பாலாஜியை நோஸ் கட் பண்ணி விட்டார் கமல். பார்க்கலாம் இன்னைக்கு என்னலாம் சரவெடி இருக்கப் போகுதோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X