சும்மா நீங்கலாம் பகுத்தறிவாளர்னு சொல்லாதீங்க.. குட்டி ஸ்டோரி சொல்லி சுரேஷுக்கு சூடு போட்ட கமல்!

சென்னை: சுமங்கலி என்கிற வார்த்தையை பயன்படுத்தியதும் இல்லாமல், அனிதா சம்பத்தை அந்த பிரச்சனையை வைத்தே டார்கெட் பண்ணி அழ வைத்து விட்டு, நானும் உங்க கட்சித் தான் சார் என ஊளையிட்ட சுரேஷ் தாத்தாவுக்கு சரியான சூடு போட்டார் கமல்.

அனிதா சம்பத் பேசியதை இரு கைகளையும் தட்டி பாராட்டி அசத்தி விட்டார் கமல்.

அர்ச்சனா மற்றும் சுரேஷ் தாத்தாவின் முகங்கள் சிவந்ததை கண்டு ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகிவிட்டார்கள்.

இன்னைக்குத்தான் சம்பவம்

இன்னைக்குத்தான் சம்பவம்

இதுவரை கமல் சார் வந்து வச்சு விளாசாமல் சமாளிஃபிகேஷன் பண்ணி சாமாதானம் படுத்தி விட்டு போகிறாரே, நாங்க எதிர்பார்த்தது இந்த கமல் சாரை இல்லையே என ரசிகர்களும் இந்த சீசன் மேல் கொஞ்சம் வெறுப்பை காட்டிய நிலையில், அதற்கு எல்லாவற்றுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இன்னைக்கு சிறப்பான சம்பவம் பண்ணிட்டார்.

சுமங்கலி பிரச்சனை

சுமங்கலி பிரச்சனை

சுமங்கலிகள் தான் விளக்கு ஏற்ற வேண்டும் நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும் என இன்னமும் பிற்போக்குத் தனமாக பேசிய சுரேஷ் சக்கரவர்த்தை ஒரு புள்ளியாக வைத்துக் கொண்டு அனிதா சம்பத் ஒட்டுமொத்த மக்களுக்கும் புரிய வைக்க பேசியதற்கு கமல் பாராட்டினார்.

பிரச்சனையை கிளப்பிய சுரேஷ்

பிரச்சனையை கிளப்பிய சுரேஷ்

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியை குறிப்பிட்டு பேசவே இல்லாத நிலையில், அவங்க என்னதான் சொல்லிட்டாங்கன்னு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் சுரேஷ் சக்கரவர்த்தி. ரியோ ராஜ் சின்ன நாட்டாமையாட்டும் அனிதாவிடம் வந்து சாரி கேளு என நச்சரித்ததும் அனிதாவை கதறி அழ வைத்தது.

சுரேஷுக்கு குட்டு

சுரேஷுக்கு குட்டு

மொட்டை தல சுரேஷ் தாத்தா இந்த வாரம் ரொம்ப போரிங் போட்டியாளராக இருந்தார் என்றெ சொல்லலாம். அதில் இருந்து தப்பிக்கவே அனிதாவின் பேச்சை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கேம் ஆடினார். சுரேஷ் பேசியது அவர் பேச்சு இல்லைங்க, அவரோட கேரக்டர் பேச்சு என சூசகமாக மொட்டை தலையில் குட்டு வைத்தார் கமல்.

என்னோட அம்மாவும்

என்னோட அம்மாவும்

அப்பாவை இழந்து விட்டு என்னையும் எங்க அம்மா அப்படித்தான் வளர்த்தாங்க சார் என்றும் பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி. அந்த வலியை நன்கு உணர்ந்திருந்தால், அனிதா சம்பத் பேசியதும் அவரை மனதார பாராட்டி இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் மன நிலையாக உள்ளது. ஆனால், சுரேஷுக்குள் இருக்கும் அந்த ஒரு சமூக அரக்கன் அதை செய்ய விடவில்லை.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

சார், நானும் உங்க ஃபாலோயர் தான், நானும் நாத்திகன் தான் என பேசிய சுரேஷை, இதுதான் டா சமயம் என வெளுத்து வாங்க ஒரு குட்டி ஸ்டோரியை கமல் பயன்படுட்தியது சிறப்பு. இப்படித்தான் ஒருத்தன் அம்மா செத்தப் பிறகு நானும் நாத்திகன் தான்னு சொன்னான். அவன் நாத்திகனே கிடையாது. அது கடவுள் நம்பிக்கை மேல் உருவான தற்காலிக வெறுப்பு நீ அந்த பக்கமே போயிடு என சுரேஷுக்கு மறைமுகமாக குட்டு வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X