பாலாஜி நல்லா அரசியல் பண்றாரு.. சம்யுக்தாவுக்கு புரியும் படி கொளுத்திப் போட்ட கமல்.. ஆரியையும் விடல!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'தறுதலை' பஞ்சாயத்து, சம்யுக்தா ஆரி சண்டை, பாலாவின் அரசியல் என பிறந்தநாள் என்றும் பாராமல் நேற்று சிறப்பாகவே தனது பணியை செய்தார் கமல்.
Recommended Video
பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டமும், ரசிகர்களுக்கான என்டர்டெயின்மென்ட்டும் நேற்று நிறையவே இருந்தது.
சம்யுக்தாவுக்கு பாலாஜி யாருன்னு நல்லாவே காட்டிக் கொடுத்து விட்டார் கமல்.

டம்மி தலைவர்
இந்த வாரம் ஏன் தான் தலைவர் ஆனேனோன்னு இருக்கு சார் என சம்யுக்தா கமலிடம் கூற, உங்களுக்கு புரிஞ்சதா நீங்க ஒரு ரியல் கேப்டனாக இல்லாமல் மேனிபுலேட் கேப்டனாக இருந்தீங்க என டம்மி மம்மி சம்யுக்தாவை டம்மி தலைவர் ஆக்கி விட்டார் கமல்.

பாலாவின் பப்பட்
சோமசேகரை பாலாஜி முருகதாஸ் பப்பட் என்று கூறியது அவரது உள் மனதில் அது பற்றி இருந்த விஷயம் தான் வெளியே வந்தது என்பதை சம்யுக்தாவுக்கு கமல் நல்லாவே உணர்த்தி விட்டார். பாலா சம்யுக்தாவை தனது பப்பட்டாக நீங்க ஒரு பாவை அதனால் கைப்பாவை என்கிறேன் என நிறைய ஊசிகளை சிரித்துக் கொண்டே கமலும் குத்தினார்.

சுதாரித்த சம்யுக்தா
கமல் சொன்னதை கேட்டதும், நல்லாவே சுதாரித்துக் கொண்ட சம்யுக்தா "அது ட்ரூ தான் சார்" என்று தனது மனதில் உள்ள குமுறலை கொட்டித் தீர்த்துவிட்டு, பின்னர், சமாளிக்க முற்படும் போது, ட்ரூ தானே அப்போ ட்ரூத்தையே பேசலாம் என பாலா பக்கம் கமல் திரும்ப, புழுவாக நெளிய ஆரம்பித்தார் பாலா.

சனம் ஷெட்டிக்கு வலிக்காதா
உங்களை ஆரி தறுதலைன்னு சொல்லிட்டாரே என அப்படி கோபப்படுறீங்க, ஆனால், அதே வார்த்தையால் பாலா சனம் ஷெட்டியை சொல்லும் போது சப்போர்ட் பண்ணீங்க, உங்களுக்கு வந்தா ரத்தம், சனம்க்கு வந்தா தக்காளி சட்னியா என்பது போல கேட்டு சம்யுக்தாவை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் கமல். இவருக்காகவா கேக் எல்லாம் செய்தோம் என நினைத்து ஃபீல் பண்ணியிருப்பார்.

ஆரியையும் விடல
கமல் விசாரிக்கும் போது, தனது மனதில் உள்ள கோபத்தை அடக்க முடியாமல் கொட்டித் தீர்க்கும் ஆரியை பார்த்த ரசிகர்கள், இவர் யோகாலாம் பண்ணலன்னா அவ்ளோ தான் போல தெரியுதே என கிண்டல் செய்து வருகின்றனர். இரண்டு வாரங்களாக போரிங் போரிங் என சொன்னதால், ஒட்டுமொத்தமாக அப்படி வெடிக்காதீங்க ஆரி என்றும் கமல் அடக்கினார்.

செதுக்க இருக்கணும்
மேலும், ஆரியிடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பது தப்பில்லை. நல்ல விஷயத்தையே நாம சொன்னாலும், அது மத்தவங்களை செதுக்க இருக்கணுமே தவிர சிதைக்க இருக்கக் கூடாது என ஆரியிடம் இருக்கும் அந்த கெட்ட விஷயத்தையும் அடையாளம் காட்டி, இந்த வாரம் ஒரு நல்ல தலைவரா நீங்க இருந்து காட்டுங்க என சவால் விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











