அந்த அறையில கேமரா வைக்காம போனதுக்கு காரணமே அதுதானே.. சுருதி பக்கம் சாட்டையை சுழற்றும் கமல்!
சென்னை: இரண்டாவது புரமோவில் பாவனியை பந்தாடிய கமல் மூன்றாவது புரமோவில் சுருதியை சுழட்டி அடித்துள்ளார்.
தாமரை செல்விக்கு காயினை எடுத்து தந்ததாக பேசிய ராஜுவையும் கண்டிக்காமல் விடவில்லை கமல்.
வர வர எலிமினேஷனை விட யாருக்கு கமல் டோஸ் கொடுக்கப் போறாரு என்றும் பாவனிக்கு இந்த வாரம் குறும்படம் போட்டே ஆக வேண்டும் என்பதையே ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

சனிக்கிழமை சாட்டை
ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பதை காண்பதை வித சனிக்கிழமை எபிசோடில் யாருக்கெல்லாம் கமல் சாட்டையை சுழற்ற போகிறார் என்பதை காண்பதிலேயே ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர். இந்த வாரம், பாவனி, சுருதி, ராஜு மற்றும் தாமரைக்கு வசமாக டோஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப சீசன்களில் கமல் சும்மா தீயாக போட்டியாளர்களை வெளுத்து வாங்கியது போல மீண்டும் நிகழ்ச்சியை சூடு பறக்க கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவரும் அதனை புரிந்து கொண்டு ஓரளவுக்கு பழைய கமலாக மாறி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாவனிக்கு பதிலடி
இரண்டாவது புரமோவில் பாவனி இன்னமும் அதே பொய்யை கமலிடம் கூறி வருவதை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். கமல் சார் பாவனிக்கு கட்டாயம் குறும்படம் போட்டு பதிலடி கொடுங்க என பொங்கி எழுந்து வருகின்றனர். இந்த சீசனின் முதல் குறும்படம் பாவனியின் குறும்படமாக இருக்குமா? என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

ராஜுவுக்கு டோஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நல்ல பெயரை எடுத்து வந்த ராஜு பாய் பாவனியிடம் பேசிய அந்த ஒரு வார்த்தை மட்டும் பிரச்சனையை உருவாக்கிய நிலையில், அது குறித்து கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் தாமரைக்கு காயினை எடுத்து கொடுத்தது நான் தான் என ராஜு சொன்னதை கமல் கண்டித்து பேசியுள்ளார்.

சுருதி ஜாலி
மூன்றாவது புரமோவில் கமல் சார் ராஜு பாயை வறுத்தெடுக்க ஆரம்பித்ததும் நல்லா கேளுங்க சார்.. இது கேம் இங்கே பாசத்துக்கெல்லாம் இடமில்லை என கமல் சொன்னதும் செம சந்தோஷம் அடைந்த சுருதி கடைசியாக கமல் அவருக்கு வைத்த செக் தான் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சுருங்கி போன முகம்
சிலருக்கு அந்த மாதிரி பேசாதீங்க மனசு புண்படுது என சொல்றவங்களுக்கு இது வந்து ஒரு இன்வேஷன் ஆஃப் பிரைவசி இல்லைங்களா.. அந்த அறையில் கேமரா வைக்காமல் போனதற்கு காரணமே அதுதானே? சுருதி என சுருதி பக்கம் கமல் சாட்டையை சுழற்றியதும் பீஸ் போன பல்பாக அவர் முகம் அப்படியே சுருங்கி போனது. போன வாரம் அபிஷேக் ராஜாவை கமல் விளாசி தள்ளியது போல இந்த வாரம் பாவனி மற்றும் சுருதிக்கு செம டோஸ் இருக்கப் போகுது என நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











