Bigg Boss Tamil 7: ஜோவிகாவை தொடர்ந்து அனன்யா பஞ்சாயத்து.. விசித்ராவை விடாமல் விளாசிய கமல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் அறிமுக நிகழ்ச்சியுடன் ஆரம்பித்த நிலையில், இந்த வாரம் தான் ஆண்டவர் ஆட்டம் ஸ்டார்ட் என்பது போல எடுத்த எடுப்பிலேயே விசித்ராவின் செம பஞ்சாயத்து தொக்காக கிடைத்துள்ளது.

முதல் ப்ரோமோவில் தொடங்கி மூன்றாவது ப்ரோமோ வரை விதிமீறல் விசித்ராவை சும்மா வச்சு செய்து வருகிறார் கமல்ஹாசன்.

Kamal Haasan slams Vichitra for Ananya Roa tattoo issue at Bigg Boss Tamil 7

ஜோவிகாவுடன் படிப்பு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அனன்யா ராவின் அந்த டாட்டூ பஞ்சாயத்தையும் கையில் எடுத்து விசித்ராவுக்கு எதிராக சாட்டையை சுழட்டி உள்ளார்.

வான்டட்டா வந்து சிக்கிய விசித்ரா: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செம ஜாலியாக சமையல் செய்து ஷோவை கடத்திய விசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் வான்டட்டாக வந்து சிக்கியிருக்கிறார். அடுத்த வனிதாவா? அனிதாவா? இல்லை அர்ச்சனாவா என ரசிகர்கள் ஏகப்பட்ட கெஸ்ஸிங் உடன் விசித்ராவை அணுகி வருகின்றனர்.

Kamal Haasan slams Vichitra for Ananya Roa tattoo issue at Bigg Boss Tamil 7

ஒருவேளை அசீம் போல முயற்சி செய்து கடைசியில் டைட்டிலை தட்டிக் கொண்டு செல்லாமல் இருந்தால் சரி என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஜோவிகா பிரச்சனை: கல்வி அவசியம் தான் ஆனால், வராத படிப்ப படித்தே தீரவேண்டும் என மாணவர்களை போட்டு அழுத்தக் கூடாது என ஜோவிகா தெளிவாக பேசினாலும், வனிதா பொண்ணு பணக்கார பொண்ணு அதனால் அப்படித்தான் பேசுவா, கல்வி தான் அனைவருக்கும் தேவையானது என சிலரும் வனிதா மகள் என்றால் சும்மாவா எப்படி ஃபயரா பேசிட்டாங்க பாரு என ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்தும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

Kamal Haasan slams Vichitra for Ananya Roa tattoo issue at Bigg Boss Tamil 7

அனன்யா டாட்டூ: அனன்ன்யா இடுப்புக்கு கீழ் குத்தியுள்ள டாட்டூவை பார்த்தே தீர வேண்டும் என விசித்ரா வம்படியாக பார்த்தது தனக்கு பிடிக்கவில்லை என அதனை காட்டி விட்டு அதை வைத்து கன்டென்ட் செய்யும் அனன்யாவுக்கும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

கமல் விளாசல்: ஜோவிகா விஷயத்தில் விசித்ராவை விளாசி கமல் பேசியது போல முதல் ப்ரோமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரோமோவில் அனன்யா டாட்டூ போடணும் போடக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு என கேட்டு மீண்டும் நோஸ் கட் செய்துள்ளார்.

இன்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களுக்கு ஆரம்பமே சரவெடி கன்ஃபார்ம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X