twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா?

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு சமூகத்திற்கும் பாடம் நடத்தி வருகிறார் நம்மவர் கமல்.

    பெண்கள் மீது நாட்டில் தான் வன்முறைகள் நடக்கின்றன, பிக் பாஸ் வீட்டிலாவது 'அது' இல்லாமல் பார்த்துக் கோங்க என ரெக்வஸ்ட் வைத்துள்ளார்.

    சனம் ஷெட்டியை சுரேஷ் சக்கரவர்த்தி செங்கோலால் அடித்த நிகழ்வை வைத்து இந்த பாடத்தை கமல் நடத்தி உள்ளார்.

    காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்!காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்!

    போட்டிக் களம்

    போட்டிக் களம்

    பிக் பாஸ் வீடு என்னதான் ஆனந்த வீடு என அர்ச்சனா தீர்ப்பு சொன்னாலும், அவங்களுக்கே பாலாஜி முருகதாஸ் பெரிய ஆப்பாக வைத்து விட்டு, இது போட்டிக் களம் தான் என நிரூபித்துள்ளார். பாலாஜி முறைத்துக் கொண்டு சொன்னதை ரியோ ராஜ் சிரித்துக் கொண்டே, சும்மா இருக்கிறதை சொரிஞ்சு விட்டு என அர்ச்சனாவை பார்த்து நக்கல் அடித்து சொன்னார்.

    மனசு புண்படும்படி பேசணும்

    மனசு புண்படும்படி பேசணும்

    நாடா? காடா? டாஸ்க்கே அடுத்தவங்க மனசு புண்படும் படி பேசி, அவங்களே எழுந்து வந்து அரக்கர்களை ரெண்டு அப்பு அப்பணும் என்பதற்காகத்தான் பிக் பாஸ் பிளான் போட்டு கிரியேட் பண்ணார். ஆனால், அதுல போயிட்டு வாடா? போடான்னு சொன்னதும் மனுஷனுக்கு மரியாதை கொடுக்கலைன்னு சொல்றதும் என்ன சாரே.. முதல்ல அவங்க யாரும் அந்த டாஸ்க்கில் மனிதர்களே அல்ல..

    பஞ்சாயத்து பண்ணிட்டாரு

    பஞ்சாயத்து பண்ணிட்டாரு

    சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி இடையே இந்த வாரத்தில் நடந்த சண்டை குறித்த பஞ்சாயத்தை பற்றி கமல் பேச ஆரம்பித்த உடனே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஹவுஸ்மேட்களும் ஆஹா கமல் சார் இதை பத்தி பேசப் போறாரே என குஷியானார்கள். பெரிதாக கமல் கஷ்டப்படுவதற்கு இடம் கொடுக்காமல் அவங்களே சரியாகிட்டதால, பஞ்சாயத்து முடிஞ்சது கிளம்பு, கிளம்பு என சொல்வது போல பிக் பாஸ் ஷோ மாறிடுச்சு..

    பெண்கள் மீது வன்முறை கூடாது

    பெண்கள் மீது வன்முறை கூடாது

    வழக்கமாவே பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் சார் அரசியல் பிரச்சார மேடையாகவும், மக்களுக்கு அறிவுரை (டிப்ஸ்) சொல்ல கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில், சனம் ஷெட்டியை சுரேஷ் சக்கரவர்த்தி அடித்தது தவறான செயல் என ஒரே போடாக போட்டு உடைத்தார். சுரேஷும் தனது தவறை உணர்ந்து அதை அக்செப்ட் பண்ணிக் கொண்டார்.

    நாட்ல தான் இல்லை

    நாட்ல தான் இல்லை

    மேலும், பெண்கள் மீதான வன்முறை நாள் தோறும் நாட்டில் நடந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய நிகழ்ச்சியான பிக் பாஸ் வீட்டிலாவது அந்த வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு ரெக்வஸ்ட்டாக கமல் முன் வைத்துள்ளது பலரது பாராட்டுக்களையும் அள்ளி உள்ளது.

    அப்போ சண்டை இருக்காதா

    அப்போ சண்டை இருக்காதா

    இந்தி பிக் பாஸ், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சண்டை போடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அடி தடி சண்டையை அனுமதிப்பதில்லை. இனியும் இந்த வீட்டில் அந்த வன்முறை இருக்காது என உறுதியான நிலையில், சண்டைக்காக ஆசைப்படும் சில ரசிகர்களுக்கு அது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். (ஆனால், வாய் சண்டை நிறையவே இருக்கும்)

    English summary
    Kamal Haasan teaches housemates and public to don’t do violence against women. Also he request minimum don’t allow physical violence against women in Bigg Boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X