Agaram Foundation: அண்ணனா..? சித்தப்பாவா..? குழம்பிய சூர்யா.. கமல் கொடுத்த அட்வைஸ்!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் இணைந்து உருவாக்கிய அகரம் பவுண்டேஷனின் 15வது ஆண்டு விழா சென்னையில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அரசியல் தளத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமாத்துறையினர் என பலரும் கலந்து கொண்டார்கள். இது மட்டும் இல்லாமல் அகரத்திற்கு நிதியுதவி செய்து வரும் பலரும், அகரம் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இதில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பேசுகையில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் பேசுகையில், " அன்பும் கல்வியும் எல்லா இடங்களிலும் கிடைக்காது. அம்மாவிடம் கிடைக்கும் அதன் பின்னர் அகரத்தில் கிடைக்கும் (இவ்வாறு கமல்ஹாசன் பேசுகையில் சூர்யா எமோஷனலாகி கமல்ஹாசனுக்கு அருகில் சென்றார்). சூர்யா பேசும்போது நான் எனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக, நற்பணி இயக்கமாக மாற்றியதுதான் காரணம் எனக் கூறினார். ஆனால் நான் அவரது அப்பா சிவக்குமாரின் அறிவுரையின் பெயரில்தான் நற்பணி மன்றங்களைத் தொடங்கினேன்.

சிவக்குமார்: அதாவது நான் ரசிகர் மன்றம் தொடங்கும் போது என்னைக் கண்டித்தவர் சூர்யாவின் அப்பா சிவக்குமார். அவர் கூறினார், ரசிகர் மன்றமெல்லாம் நடிகர்கள் அரசியலுக்குச் செல்ல போட்ட திட்டங்கள். ஆனால் நீ ஏன் இவ்வாறு எல்லாம் செய்கிறாய் என்று கேட்டார். அதன் பின்னர் தான் எனது ரசிகர்கள் மன்றத்தை நற்பணி மன்றமாகவும் இயக்கமாகவும் மாற்றினேன். அதன் பின்னர் அதை சிவக்குமார் அண்ணனிடமும் கூறிவிட்டேன்.
நீட்: அவரும் நானும் பேசிக்கொண்டு இருந்தால் எங்களது பேச்சை நிறுத்த முடியாது. அவர் பேசி பேசி தான் நான் இன்றைக்கு இப்படி உள்ளேன். எனக்கு கூறியதை சூர்யாவுக்கும் கார்த்திக்கும் சொல்லி இருப்பார் அல்லவா. எனது நற்பணி மன்றங்களின் செயல்பாடுகள் அகரம் தொடங்க காரணமாக இருந்தது என்று கூறினார் சூர்யா. இன்றைக்கு அகரத்தின் மூலம் மருத்துவர்கள் ஆனவர்கள் மேடை ஏறினார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாணவர்கள் மருத்துவர்களாக மாற முடியவில்லை. அதற்கு காரணம், நீட். அதிகாரச் சங்கிலிகளையும் சனாந்தனச் சங்கிலிகளையும் உடைக்கும் சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது.

அன்போடு: எனது நற்பணி மன்றங்களின் பார்வையில் இருந்து பார்த்தால் இவரை நான் அண்ணா என்று அழைக்கவா? தம்பி என்று அழைக்கவா என குழம்பிப்போய் உள்ளேன். அவர் என்னை சித்தப்பா என்று அழைப்பதா? அண்ணா என்று அழைப்பதா என்று குழப்பத்தில் இருப்பதாக கூறினார். குழப்பமே வேண்டாம், அன்போடு அழையுங்கள் இந்த உறவு நீடிக்கட்டும்" என்றும் பேசினார். அதன் பின்னர் அகரம் பவுண்டேஷனின் செயலியை அறிமுகம் செய்துவைத்தார் கமல் ஹாசன். கமல்ஹாசனிடம் அகரம் பவுண்டேஷனுக்கான நன்கொடை நிதியாக ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையை இயக்குநர் தா.செ. ஞானவேல் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











