Ponniyin Selvan 2 Audio Launch.. பொன்னியின் செல்வன் எடுக்கவே தைரியம் வேண்டும் - கமல் ஹாசன் ஓபன் டாக்

சென்னை: Ponniyin Selvan 2 Audio and Trailer Launch Kamal Speech - பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கே மிகப்பெரிய தைரியம் வேண்டும் என ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று அந்தப் படத்தை ரசித்தனர்.

ரிலீஸுக்கு தயாரில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2

ரிலீஸுக்கு தயாரில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2

முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீஸாக இருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படமும் உலகளவில் வசூல் சாதனை செய்யும் என ரசிகர்களும், படக்குழுவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரமாண்டமகா நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமல் ஹாசன், பாரதிராஜா, சிம்பு பங்கேற்றனர். கமல் ஹாசன் ட்ரெய்லரை வெளியிட்டார். பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர்.

கமல் ஹாசன் பேச்சு

கமல் ஹாசன் பேச்சு

இந்த விழாவில் பேசிய கமல் ஹாசன் உயிரே, உறவே, தமிழே என தனது பேச்சை ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், "எந்த அரங்கம் போனாலும் இந்த் வார்த்தை மாறாது. இதே மாதிரியான அன்போட அர்த்தம் தம்பி சிம்புவுக்கும் தெரியும். என்னுடைய சந்தோஷத்துக்கு காரணம் கரோகஷம் மட்டுமல்ல. கு தெரியும். என்னுடைய சந்தோஷத்துக்கு காரணம் கரகோஷம் மட்டுமல்ல. நல்ல கலைஞர்களுடன் பணியாற்றியதும். மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்பவர்களின் நானும் ஒருவன்.

எங்கள் இருவருக்குள் இருக்கும் பந்தம்

எங்கள் இருவருக்குள் இருக்கும் பந்தம்

எனக்கும் அவருக்குமான பந்தம் நாயகனுக்கு முன்னாள் தொடங்கி இப்போதுவரை தொடர்கிறது. கடந்த திங்கள்கிழமை துபாய்க்கு சென்றிருந்தபோது ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே 50 இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதனை கண்டதும் மெய்சிலிர்த்துப்போனேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும்.

பொன்னியின் செல்வன் எடுக்கவே தைரியம் வேண்டும்

பொன்னியின் செல்வன் எடுக்கவே தைரியம் வேண்டும்

இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா வீரமா என பட்டிமன்றம் நடந்தது. இந்தப் படத்தை எடுக்கவே ஒரு தைரியம் வேண்டும். அதை பார்க்கும்போது வீரமும், காதலும் வென்றுள்ளது. அதற்கு உதாரணம் இந்த படத்தில் இணைந்தவர்கள்தான். கனவு கலையாமல் முதல் பாகம் தொடந்து இரண்டாம் பாகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது சோழர்கள் பொற்காலம் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பொற்காலம். அதை தூக்கிப் பிடிக்க வேண்டும். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X