ரஜினியால் வந்த சோதனை.. வேகவேகமாக செயல்படும் கமல்ஹாசன்.. இந்தியன் 2ல் இருக்கும் சர்ப்ரைஸ்!

Recommended Video

Indian 2 Movie: இவரே இப்படி சொன்னால் அப்போ ரஜினி?- வீடியோ

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் விஷயம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார்.

அதேபோல் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் சினிமா மீது மிகவும் குறைவாகவே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா ஏன்

சினிமா ஏன்

தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் கமல்ஹாசன் இப்படி பிஸியாக இருப்பதால், இந்தியன் 2ன் பட பிடிப்பு மிகவும் மெதுவாகவே செல்கிறது. ஷங்கர் திட்டமிட்டதை விட அவர் இந்த படத்தை மிகவும் மெதுவாக எடுத்து வருகிறார். இதனால் பட்ஜெட்டும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினி

ரஜினி

ஆனால் இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார். காலா, கபாலி, எந்திரன் 2.0, பேட்ட இப்போது தர்பார் என்று வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்று தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கமல் முடிவு

கமல் முடிவு

இதனால் இந்தியன் 2 படத்தை வேகமாக வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியன் 2 தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவு அடைந்து தற்போது ஆந்திராவில் ஷூட்டிங் நடக்க தொடங்கி உள்ளது.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

அதேபோல் இந்தியன் 2 படத்தின் இரண்டாவது போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் தாத்தா போஸ்டர்தான் வெளியானது. தற்போது இளம் வயது கமல்ஹாசன் போஸ்டர் வெளியாக உள்ளது.

எப்படி

எப்படி

ஆம் இந்தியன் 2 படத்தில் இளம் வயது கமல்ஹாசனும் இருக்கிறார். அவரின் தோற்றம் இதில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிறைய அரசியல் வாசத்துடன் ராபின் ஹுட் பாணியில் இந்த படம் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த போஸ்டரை தயாரிக்கும் பணியில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X