தக் லைஃப் படத்தின் கதை இதுதானா?.. கமல்ஹாசன் ஓபன் டாக்.. அந்த படத்தோட கதை மாதிரியே இருக்கே?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. வரும் மே 17ம் தேதி தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானால் கிட்டத்தட்ட படத்தின் கதை என்ன என்பது ஓரளவுக்கு ரிவீல் ஆகும்.
இந்நிலையில், ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் கதை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைவன் இருக்கின்றான் படம் தான் தக் லைஃப் படமாக மாறியதா? என்கிற கேள்வியும் கிளம்பியுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இண்டஸ்ட்ரி ஹிட் படமான விக்ரம் படத்தின் கதை போல இருக்கிறதே என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
கமல்ஹாசன் எழுதிய கதை: நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள படம் தான் தக் லைஃப். இந்தியன் 2 திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நிலையில், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்தியன் 3ம் பாகம் வருமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. வந்தாலும், அந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காது என்றே கூறுகின்றனர். இந்நிலையில், தக் லைஃப் படத்தின் கதையை தான் எழுதியதாகவும் அதன் பின்னர் மணிரத்னம் அதில் இருந்து ஒரு விஷயத்தை மாற்றி கிளைமேக்ஸை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என பேசியுள்ளார்.
அமர் ஹைன்: கமல்ஹாசன் முன்னதாக தலைவன் இருக்கின்றான் படத்தை பண்ண வேண்டும் என்கிற முயற்சியில் இருந்தார். அவர் எழுதிய கதைக்கு அமர் ஹைன் என டைட்டில் வைத்துள்ளதாக இந்த பேட்டியில் கூறியுள்ளார். கதையின் நாயகன் இறந்துவிட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்பது தான் அந்த கதை எனக் கூறியுள்ளார். இந்த கதையை மணிரத்னம் தக் லைஃப் படமாக எப்படி மாற்றியுள்ளார் என்பதில் தான் விஷயமே உள்ளது என்கின்றனர்.
விக்ரம் படத்தின் கதையா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் படத்தின் ஆரம்பத்திலேயே கமல் இறப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இடைவெளியில் தான் அவர் கோஸ்ட்டாக உலாவிக் கொண்டிருக்கிறார் என்பது ரிவீல் செய்யப்படும். அதே போன்ற கதையாகவே தக் லைஃப் படம் உருவாகி உள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தக் லைஃப் vs கூலி: இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியது. சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் 100 கோடி கிளப்பில் மட்டுமே இணைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்களுக்கு இடையே தான் பெரிய பாக்ஸ் ஆபீஸ் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் போல தக் லைஃப் படம் 500 கோடி வசூலை அள்ளுமா? அல்லது இந்தியன் 2 போல சொதப்பிவிடுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











