Indian 2: நடிப்பதை நிறுத்த முடிவு! கமல் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத டி.ஆர்.. காரணம் இதுதான்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டனர். சிம்புவை மேடைக்கு அழைத்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் தமிழ் சினிமா வட்டாரத்தையே பரபரப்பாக்கியது. படத்துக்கான புரோமோஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் வசூலை அள்ளத் திட்டமிட்டு படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் நடிகர் சிம்பு குறித்தும் அவரது அப்பா குறித்தும், உலக நாயகன் கமல்ஹாசன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்த நிலையில், இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன், உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் படம் தொடர்பாக பேசினர்.

Indian 2 Kamal Haasan Simbu

அப்போது நடிகர் சிம்பு தொடர்பாகவும், நடிகர் சிம்புவின் அப்பாவான இயக்குநர் டி.ராஜேந்திரன் தன்னிடம் அழுதது தொடர்பாகவும் கமல்ஹாசன் பேசினார். அதாவது, " வெளியில் சிம்பு கண்கலங்கியது குறித்து பேசினீர்கள். எனக்கு எனது முதுகுக்கு பின்னால் பேசும் வார்த்தைகள் மிகவும் மிகையானது என எனக்குத் தெரியும். சிம்புவுக்கு எங்கிருந்து இந்த குணம் வந்தது எனக் கூற நான் கடமைப் பட்டிருக்கின்றேன். அந்த குணம் அவருடைய அப்பாவிடம் இருந்து வந்தது.

Indian 2 Kamal Haasan Simbu

நடிப்பதை நிறுத்த முடிவு: எனக்காக கண் கலங்கும் அந்த பழக்கம் அவருடைய அப்பாவிடம் இருந்து வந்தது. ஒருநாள் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என சொன்னபோது, சிம்புவிடமே இது தொடர்பாக பேசியிருக்கின்றேன். நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடலாம எனக் கூறியதும் டி.ராஜேந்திரன் என்னைத் தேடி வந்துவிட்டார். என் சட்டை நனையும் அளவிற்கு என் நெஞ்சில் சாய்ந்து அழுதுவிட்டார்.

டி.ஆர். ஒரு காரணம்: நான் என்ன ஆச்சு, எதற்காக இப்படி அழுகின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு, நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. நீங்கள் நடிக்க மாட்டேன் எனச் சொல்லவே கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் எனக் கூறினார். நான் இன்றைக்கு இந்த மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்க சிம்புவின் அப்பாவும் ஒரு காரணம். இதனை உங்க அப்பாவிடம் போய்ச் சொல்லுங்க சிம்பு" என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

தக் லைஃப்: சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தினை மணிரத்னம் இயக்குகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் மும்மரமாக போய்க்கொண்டு உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கோ இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X