டிஜிட்டலுக்கு மாறும் சப்பாணி, மயில், பரட்டை

By Mayura Akilan

பழைய ஹிட் படங்களை டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது சீசனாகிவிட்டது. கர்ணன், வசந்தமாளிகை என சிவாஜி படங்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் கமல், ரஜினி, ஸ்ரீதேவிக்கு உச்சத்தை தொட வைத்த 16 வயதினிலே திரைப்படம் டிஜிட்டல் மயமாகிறது.

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும், அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தனர். வில்லனாக நடித்த ரஜினி பேசிய வசனங்கள் ரசிகர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகளாக மாறிப்போனது.

ஹைடெக் மயில், சப்பாணி

ஹைடெக் மயில், சப்பாணி

1977ல் எடுக்கப்பட்ட படம் 16 வயதினிலே. அரங்கத்தினுள் நடைபெற்ற படப்பிடிப்பை முதல்முறையாக கிராமத்திற்கு கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவிற்கு உண்டு. இதில் அழகான கமல், ஸ்ரீதேவியை கிராமத்து கதாபாத்திரங்களாக மாற்றி அவர்களாகவே வாழ வைத்திருப்பார் பாரதிராஜா.

பரட்டையின் வில்லத்தனம்

பரட்டையின் வில்லத்தனம்

வில்லனாக நடித்த ரஜினி ஒவ்வொரு முறையும், ‘இது எப்படி இருக்கு?' என்று கேட்பது செம பஞ்ச். அதிலும் ரஜினியோடு சேர்ந்து கவுண்டமணியும் கலக்கல் காம்பினேசனில் வந்திருப்பார்.

தேசிய விருது பெற்ற ஜானகி

தேசிய விருது பெற்ற ஜானகி

இளையராஜா இந்தப் படத்தில் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். ஒவ்வொரு படலும் அற்புதமாக அமைந்தவை. நகரத்திலும், கிராமங்களிலும் கலக்கின இந்த பாடல்கள். இதில் செந்தூரப்பூவை பாடலைப் பாடிய ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் செந்தூரப் பூ என்று ஒரு பூ உலகின் எந்தப் பாகத்திலும் இல்லை என்பதை விருதைப் பெற்ற பாடலாசிரியரான கங்கை அமரன் பின்னாளில் கூறி அனைவரையும் அதிரவைத்தார்.

டி.டி.எஸ் மிக்ஸிங்

டி.டி.எஸ் மிக்ஸிங்

அப்போது சூப்பர் ஹிட் ஆக ஓடிய 16 வயதினிலே தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் முடிந்துள்ளன. டி.டி.எஸ். மிக்சிங் டி.ஐ. தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு உள்ளது. 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘16 வயதினிலே' படம் திரைக்கு வருகிறது.

இளையராஜா மீது நம்பிக்கை

இளையராஜா மீது நம்பிக்கை

சில காட்சிகளில் ரீ-ரிக்கார்டிங்கை புதிதாக செய்து கொடுப்பார் ராஜா என்ற நம்பிக்கையில் உள்ளார்கள் தயாரிப்பு நிறுவனத்தினர். ஆனால் இளையராஜா இன்னமும் முடிவு சொல்லவில்லையாம்.

கருத்து மோதலில் பாரதிராஜா- இளையராஜா

கருத்து மோதலில் பாரதிராஜா- இளையராஜா

16 வயதினிலே படத்தின் ஹீரோவும் வில்லனும் 36 வருடங்களின் பின்னரும் நண்பர்களாக உள்ளார்கள். ஆனால் அப்போதைய உயிர் நண்பர்களான பாரதிராஜாவும், இளையராஜாவும் இன்றைக்கு கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X