இன்னைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா? பாபநாசம் சுயம்புலிங்கம் எங்க போனாரு?டிரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: Papanasam memes (பாபநாசம் மீம்ஸ்) ஆகஸ்ட் 2ந் தேதியான இன்று கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மீம்ஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷயம்' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமலஹாசன் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டு வெளியானது.

பாபநாசம்: கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இப்படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில், எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருந்தனர். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு அசல் நெல்லைகாரனே தோற்றுப்போகும் அளவுக்கு சுயம்புலிங்கம் ரோலில் அனைவரும் பிரம்மித்து போகும் அளவுக்கு நடித்திருப்பார் கமல்.
சுயம்புலிங்கம்: குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட சுயம்புலிங்கம், மகள் செய்த கொலையை மறைக்க பக்காவாக திட்டம் போட்டு ஒவ்வொரு பிளானையும் சும்மா கனகச்சிதமாக போடுவார். அந்த கொலையை மறைக்க குடும்பத்தோடு தென்காசி தியானத்திற்கு போனது, ஓட்டலில் சாப்பிட்டது, படம் பார்த்தது என அனைத்தும் ஆகஸ்ட் 2ந் தேதி தான் காட்சிக்கு காட்சி கூறி அனைவரையும் நம்பவைப்பார்.

ஆகஸ்ட் 2ந் தேதி மறந்துட்டீங்களா? : பாபநாசம் படம் பார்த்து விட்டு திரையரங்கைவிட்டு வெளியில் வந்த அனைவரும் அவ்வளவு எளிதில் இந்த ஆகஸ்ட் 2ந் தேதியை மறக்கவில்லை. அந்த அளவுக்கு அந்த தேதி மனதில் பதிந்துவிட்டது எனலாம். காதலியின் பிறந்த நாள், திருமண நாளை மறந்து போகும் நம்ம ஊர் பாய்ஸ், பாபநாசம் சுயம்புலிங்கம் தென்காசிக்கு தியானத்திற்கு போன நாளை ஞாபகம் வைத்து இன்று மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
வசமா சிக்கிய சுயம்புலிங்கம்:பாபநாசம் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன போதும் இன்று ஆகஸ்ட் 2ந் தேதி என்பதால், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இந்த நாளில் விதவிதமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். ஹாட் டாப்பிக் எதாவது கிடைக்காதா, அதை வைத்து ஏதாவது செய்யலாம் என காத்திருந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இன்று பாபநாசம் சுயம்புலிங்கம் சிக்கி உள்ளார்.

தாமதமாகி வருகிறது: த்ரிஷயம் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து த்ரிஷயம் படத்தின் இரண்டாவது பாகமும் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் மட்டும் இந்த படத்தின் ரீமேக் காலதாமதமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











