சூடு பிடிக்கும் கமல்ஹாசனின் விக்ரம் பட பிசினஸ்.. கேரள ரிலீஸ் உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சூடு பிடித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் கேரள ரிலீஸ் உரிமை பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்த படமும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

காப்பாற்றுவாரா கமல்

காப்பாற்றுவாரா கமல்

இத்தனை ஆண்டுகளாக கெத்துக் காட்டி வந்த கோலிவுட் திரையுலகம் இந்த ஆண்டு காலாண்டு வரை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை கமல்ஹாசன் மாற்றி மீண்டும் கோலிவுட்டை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் புரமோஷன் பணிகளும் ப்ரீ ரிலீஸ் பணிகளும் சூடு பிடித்துள்ளன.

ரயில்களில் புரமோஷன்

"ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது." என விக்ரம் படத்தின் ரயில் புரமோஷன் வீடியோவை ஷேர் செய்து கமல் ட்வீட் செய்திருந்தார்.

டெக்னாலஜி பிரியர்

டெக்னாலஜி பிரியர்

புதிய டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு சேரும். இந்நிலையில், விக்ரம் படத்தில் டீ ஏஜிங் முறைப்படி இளமையான கமலை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தின் ஒளிப்பதிவை 'ஜல்லிக்கட்டு' புகழ் கிரிஷ் கங்காதாரன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கேரள ரிலீஸ் உரிமம்

கேரள ரிலீஸ் உரிமம்

இந்நிலையில், அடுத்தபடியாக விக்ரம் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ் மிகப்பெரிய விலைக்கு வாங்கி உள்ளார். அதற்கான ஒப்பந்தம் கையொப்பம் இட்ட நிலையில், எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

வசூல் சாதனை படைக்குமா

வசூல் சாதனை படைக்குமா

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என மிகப்பெரிய ஸ்டார் காஸ்ட் நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஸ்பெஷல் அப்பியரன்ஸாக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த கோலிவுட் படமாக விக்ரம் படம் சாதனை படைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X