மைனாவுக்கு நோஸ் கட் கொடுத்த கமல்.. ராம், ஜனனி ஜெயில் மேட்டரை வைத்தும் அரசியல் பேச்சு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் தனது அரசியல் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன்.
அதற்காகவே அரசியல்வாதியான விக்ரமனையும் உள்ளே போட்டியாளராக அனுப்பி தொடர்ந்து அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனனி மற்றும் ராம் ராம்சாமி சிறைக்கு சென்ற விவகாரத்தை வைத்தும் அரசியல் பேசி உள்ளார் கமல்.

கருப்பு உடையில் கமல்
சனிக்கிழமை எபிசோடுக்கு கோட் சூட்டில் வந்த கமல்ஹாசன், முதல் எவிக்ஷனை செய்ய வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிக்கு கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டி அணிந்து கொண்டு செம கெத்தாக வந்துள்ளார். கமல்ஹாசனின் உடை தாறுமாறாக இருக்கிறது என ரசிகர்கள் புரமோவை பார்த்தே புகழ்ந்து வருகின்றனர்.

அசல் கோலார் எஸ்கேப்
அசீமுக்கு எப்படி போட்டியாளர்களை வைத்து மட்டும் ஒப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வைத்து பின்னர் அவரை சேவ் செய்தாரோ அதே போல அசல் கோலார் - தனலட்சுமி பிரச்சனையை கண்டுக்காமலே கடந்து போய் விட்டார் கமல் என 3வது புரமோவிலும் அந்த பிரச்சனையை கமல் கையிலெடுக்காததை பார்த்து ரசிகர்கள் காண்டாகி உள்ளனர்.

சிறை தண்டனை பஞ்சாயத்து
ராம் ராமசாமி மற்றும் ஜனனி இருவருமே வாயில்லா பூச்சிகளாக இருப்பதால் மற்ற போட்டியாளர்கள் ஒன்றாக கூடி அவர்களை சிறைக்கு அனுப்பியது கொஞ்சம் கூட சரியில்லாத விஷயம் என்கிற பஞ்சாயத்தை கமல் கையிலெடுத்து இருப்பதை இன்றைய 3வது புரமோவில் காட்டி உள்ளனர்.

மைனாவுக்கு நோஸ் கட்
அசீம் பேசியே எங்களை சரி செய்து விட்டார் என மைனா எழுந்து பேசியதும், அப்போ அப்படி பேசி மயக்கினால் மாறிவிடுவீர்களோ என கமல் மைனா நந்தினிக்கு சரியான நோஸ் கட் கொடுத்தார். கமல் சொன்னதை கேட்டதும் ஆயிஷாவின் எக்ஸ்பிரஷன்கள் தான் செம ஹைலைட் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அரசியல் பேச்சு
இதில் இருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என இப்படி பேசி மயக்குவர்களை நம்பி நாம் ஏமாந்து போகக் கூடாது என மற்ற கட்சிகளுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு வருவதை சூசகமாக சொல்லி கிடைத்த கேப்பில் அரசியல் பேசி விட்டார் கமல். இந்த சீசனிலும் அரசியல் பேச்சு வழக்கம் போல ஆரம்பமாகி விட்டது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











