For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இது தான் ஆண்டவர் அட்டாக்.. ஆரி மூஞ்சில ஈ ஆடல.. இப்படியா பப்ளிக்கா உடைப்பீங்க? பாலாவுக்கு தெரிஞ்சா?

  |

  சென்னை: காதல் கண்ணை மறைக்குதுன்னு கன்ஃபஷன் ரூம்ல ஆரி பேசினதை பப்ளிக்கா போட்டு கமல் உடைக்கும் தரமான சம்பவமாக 3வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

  என்னடா வீக்கெண்ட் முழுவதும் பாலாவுக்கு மட்டுமே ஆப்பு இருக்குமா? என எண்ணிய ரசிகர்களுக்கு ஆரிக்கும் இருக்கு பெருசா என புரமோ போட்டு பாலா ஆர்மியினரை ஹேப்பி ஆக்கி விட்டனர்.

  ரியோ ராஜுக்கும் லைட்டா டிச் இருக்கு என்றும் புரமோ தெளிவு படுத்துகிறது.

  தம்பி நீங்க பாலா மிதுன் ஃபேனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் சூரரைப் போற்று மீம்ஸ்!

  காதல் கண்ணை மறைக்குது

  காதல் கண்ணை மறைக்குது

  கன்ஃபஷன் ரூமில் இந்த வாரம் பாலாவை நாமினேட் பண்ண ஆரி, அவர் லக்சரி டாஸ்க்குக்கு வேட்டு வைத்தார். அது இதுன்னு ஏகப்பட்டது இருக்க, காதல் கண்ணை மறைக்குது என்கிற வாதத்தை முன் வைத்து இருந்தார். இன்றைய மூன்றாவது புரமோவில் அந்த விவகாரத்தை பற்றி கமல் பேச ஆரம்பித்துள்ளார்.

  ஆரி மூஞ்சில ஈ ஆடல

  ஆரி மூஞ்சில ஈ ஆடல

  இன்றைய நிகழ்ச்சி முழுவதும் பாலாவை மட்டுமே கமல் ரோஸ்ட் பண்ணுவார் என நினைத்த ரசிகர்களுக்கு, சர்ப்ரைஸாக ஆரி சொன்ன அந்த மேட்டரை எடுத்து பேசியதும், ஆரி மூஞ்சில ஈ ஆடல, இப்படியா ஆண்டவர் பப்ளிக்கா போட்டு உடைப்பார் என பிக் பாஸ் ரசிகர்களும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

  நம்பியார் சிரிப்பு

  நம்பியார் சிரிப்பு

  பாலாஜி முருகதாஸை நமட்டுச் சிரிப்பு சிரிக்காதீங்கன்னு சொல்லிவிட்டு கமல்ஹாசன் ஆரி விஷயத்தை ஆரம்பித்து விட்டு, நம்பியார் சிரிப்பு சிரிப்பதை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு ஆரிக்கும் ஆப்பு இருக்கும் போலயே என இப்பவே பிக் பாஸ் ஷோவை போடுங்க என்கிற ரேஞ்சுக்கு விஜய் டிவி முன்னாடி உட்கார ஆரம்பித்து விட்டனர்.

  யாருன்னு மட்டும் சொல்லுங்க

  யாருன்னு மட்டும் சொல்லுங்க

  ஷிவானியும் பாலாவும் லவ் பண்ணிட்டு சுத்துறாங்க என ரம்யா பாண்டியன், சம்யுக்தா, அர்ச்சனா, சுச்சி என ஏகப்பட்ட பேர் மூஞ்சிக்கு நேராவே சொல்லிட்டு திரியுறாங்க, இதில், கன்ஃபசன் ரூமில் சொன்ன ஆரியை மட்டும் பாலா என்ன பண்ணிடப் போகிறார். ஆனால், யாருன்னு மட்டும் சொல்லுங்க கமல் சார், உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன் என்கிற ரேஞ்சுக்கு ரியாக்‌ஷனுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

  காப்பாற்றும் கமல்

  காப்பாற்றும் கமல்

  பாலா பிக் பாஸ் தமிழ் சீசன் 4க்கு ஷிவானி போலவே தேவை என்பதால், பாலாவை கொஞ்சமாக ரோஸ்ட் பண்ணிவிட்டு, இந்த வாரமும் கமல் சேஃப் பண்ணிடுவார் என்றே தெரிகிறது. முரட்டுக் குத்தா குத்த சொன்னா கமல் நல்லா தடவிக் கொடுக்கிறாரே என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

  அனிதாவுக்கு ஒண்ணுமில்லையா

  அனிதாவுக்கு ஒண்ணுமில்லையா

  கமல்ஹாசனையே ஓரவஞ்சனை பண்றாரு, தன்னை மட்டுமே டார்கெட் பண்ணி ஒரு தலை பட்சமாக நடந்துக்கிறாரு என அனிதா சம்பத் பேசிய சீனை கமலுக்கு போட்டு காட்டவில்லையோ? அனிதா பற்றி கமல் ஏதும் பேசலையே? என புரமோவிலே எல்லாத்தையும் பார்த்து விட துடிக்கும் கூட்டம் கமெண்ட் அடித்து விசாரித்து வருகிறது.

  ரியோவுக்கு லேசா டிச்

  ரியோவுக்கு லேசா டிச்

  பாலாவுக்கு நச் கொடுத்து விட்டு, ஆரிக்கு அழகா ஆப்பு வைத்து விட்டு, ரியோவையும் போகிற போக்கில் லேசா டிச் கொடுத்து இருக்கிறார் கமல். இப்பவும் பாலா சார்பாகவே ஆரியையும், ரியோவையும் கமல் விளாசுவதை பார்த்தால், பாலா இன்னமும் சில வாரங்கள் திமிருத்தனம் பிடித்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் வீருநடை போடுவார் என்றே தெரிகிறது.

  English summary
  Kamal Haasan stir Aari’s confession room statement about Bala Shivani love in Bigg Boss promo 3. Aari and Bala’s reactions are mind blowing.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X