Thug Life: தக் லைஃப் டிரைலர் ரிலீஸ் தேதி.. உலக நாயகனே குறித்த தேதி.. ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தில் அவருடன் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் படம் உலக நாயகன் கமல்ஹாசனின் 234 வது படம். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே, இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதுவும் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் தக் லைஃப் படத்தின் மூலம் இணைவதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்கு காத்துக் கொண்டு இருந்தார்கள். முதலில் படத்தில் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இது மட்டும் இல்லாமல், படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்றதும் ரசிகர்களுக்கு உச்சகட்ட சந்தோஷம். அதாவது மீம்களில் இணையவாசிகள் பகிரும் டிராகன் டெம்ப்ளேட் தான் என்பது போல படத்தில் பணியாற்றும் நடிகர்கள் தொடங்கி, இயக்குநர், இசையமைப்பாளர் என அனைத்துமே அடி தூள்.
படக்குழு: படத்தை ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் செய்வது என்று படக்குழு ஏற்கனவே திட்டமிட்டு புரோமோசன் பணிகளை செய்து வந்தது. குறிப்பாக கமல் ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா என இவர்கள் மூவரும் இணைந்து பேட்டி அளித்தார்கள். அதேபோல், மொத்த படக்குழுவும் ஒரு முறை செய்தியாளர்களைச் சந்தித்தது. இதில் சிம்பு பேசியது மிகவும் பரவலாக அனைவரிடத்திலும் பரவியது. அதாவது, மணி சார் படம் என்றால் நான் மற்ற இரண்டு படங்களை விட்டுவிட்டு கூட வந்து நடித்துக் கொடுப்பேன். நான் ஏன் மணி சார் படத்திற்கு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்குச் செல்கிறேன் என்றால், மணி சார் சரியான நேரத்திற்கு வருகிறார். அவர் நடிகர்களின் நேரத்தை வீணாக்குவதில்லை, கால்ஷீட்டை வீணாக்குவதில்லை, சம்பளம் சரியாக வந்து சேர்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரது படத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்ல மாட்டேன்?. நான் பிறந்தததில் இருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். எனக்கு ஷீட்டிங் போவதைவிட வேறு என்ன வேலை" என்று பேசினார். அவரது பேச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சிம்பு பேசுவதை அருகில் அமர்ந்து கேட்ட உலக நாயகன் கமல்ஹாசன் சிம்புவின் பேச்சினை ஏற்றுக் கொண்டார்.

ஜூன் மாத சென்டிமென்ட்: படத்தை ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடுவதற்கு மற்றொரு காரணம், கடந்த 2022ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. குறிப்பாக படம் வசூல் ரீதியாகவே உலக நாயகனுக்கு புதுத் தெம்பைக் கொடுத்தது. அந்த படத்தின் வசூல் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது.
போர்: தக் லைஃப் படத்தின் புரோமோசன்களை படக்குழு திட்டமிட்ட தருணத்தில், இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட போர் காரணமாக படத்தின் புரோமோசன் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக படத்தின் டிரைலர் ரிலீஸ், இசை வெளியீட்டு விழா என அனைத்துமே மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக உலக நாயகன் கமல்ஹாசன் நேரடியாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மறு அறிவிப்பு: அதாவது தேசம்தான் முதன்மை, கொண்டாட்டங்களும் பொழுது போக்கும் அதன் பின்னர்தான் என்று கூறியிருந்தார். அவரது இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில், 26 சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய ராணுவம், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்த சில முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால், இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறியது. அதன் பின்னர் உலக நாடுகள் இரு நாட்டு அரசிடமும், போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதால், நாட்டின் எல்லைப் பகுதியில் மெல்ல மெல்ல இயல்பு நிலை உருவாகி வருகிறது. இதனால் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிரைலர் ரிலீஸ் தேதி: அதாவது வரும் 17ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் டிரைலர் எத்தனை மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டிரைலர் ரிலீஸ்க்குப் பின்னர் மற்றும் முன்னர், மொத்த படக்குழுவும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் புரோமோசன் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்நாட்டில் தீவிரமாக புரோமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக இந்த முறை ஆஸ்திரேலியாவை, உலக நாயகன் கமல்ஹாசன் குறிவைத்துள்ளார் என்ற தகவல் ஏற்கனவே திரைத்துறை வட்டாரத்தில் உலா வந்தது. படக்குழு தரப்பில் இருந்து ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட ஜிங்குஜா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்த பாடலுக்கு சிம்புவும் கமல்ஹாசனும் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு டிரெண்ட் ஆனது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











