இந்தி திணிப்புக்கு எதிரானவன்.. எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல.. ஷெரினா, ஆயிஷாவை விளாசிய கமல்!

சென்னை: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியா? இல்லை மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியா இது? என கேட்டு ஷெரினா மற்றும் ஆயிஷாவை விளாசி எடுத்து விட்டார் கமல்ஹாசன்.

வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா பர்ஃபார்மன்ஸ் பண்ணுங்க என மிக்சர் திண்ணும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் கண்டித்து தள்ளி விட்டார்.

தொடர்ந்து ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கமல்ஹாசன் இப்படி சவுக்கை சுழற்றியதை பார்த்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சம்பளம் வாங்குறீங்க

சம்பளம் வாங்குறீங்க

இது ஒரு கேம் ஷோ என்றாலும், போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாளுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் வாங்குறீங்க, அதற்கான வேலையை செய்து தான் ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் பிக்பாஸோ நானோ உங்களுக்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது என கடுமையாக எச்சரித்துள்ளார் கமல்ஹாசன்.

தனா, ஷிவினுக்கு டோஸ்

தனா, ஷிவினுக்கு டோஸ்

மக்கள் போட்டியாளராக தேர்வான ஷிவின் மற்றும் தனலட்சுமி எந்தவொரு டாஸ்க்கிற்கும் செருக்குடன் தாமதமாக வருகின்றனர் என்றும் அலட்சியப்படுத்துகின்றனர் என்றும் கமல் போட்டு பொளந்து கட்டி விட்டார். தனலட்சுமி மற்றும் ஷிவினுக்கு தேவையான டோஸ் தான் இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலையாள பிக் பாஸ் இல்லை

மலையாள பிக் பாஸ் இல்லை

இது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி தனியா நடக்குது. தொடர்ந்து ஆயிஷா மற்றும் ஷெரினா ஏகப்பட்ட வார்னிங்கிற்கு பிறகு ஏன் அப்படி பேசிறீங்க, இந்த நிகழ்ச்சிக்கு கமீட் ஆகித்தானே வந்தீங்க என வெளுத்து வாங்கி விட்டார். கமல் மேல் உள்ள கோபம் இன்னும் ஷெரினாவுக்கு போகவில்லை போல, நான் கிளம்புறேன், தோத்துட்டேன் என்றே புலம்பிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறார்.

இந்தி திணிப்புக்கு எதிரானவன்

இந்தி திணிப்புக்கு எதிரானவன்

கடைசியாக நான் இந்தி திணிப்புக்கு எதிரானவன்.. ஆனால், எந்த மொழிகளுக்கும் எதிரானவன் அல்ல, ஏக்துஜே கேலியே படம் மூலம் பிரபலமானவன். இந்தி பாடல்கள் பிடிக்கும். மலையாள படங்களில் நடித்துள்ளேன். ஆனால், இங்கே ஏற்றுக் கொண்ட பணி என்ன என்பதை புரிந்து நடங்க என்று ஆர்டர் போட்டுள்ளார்.

ரெட் கார்டு கொடுப்பேன்

ரெட் கார்டு கொடுப்பேன்

இதுவரை எந்த சீசனிலும் ரெட் கார்டு கொடுக்கும் உரிமை எனக்கு இருந்தும் நான் கொடுத்தது இல்லை. ஆனால், இதற்கு மேல் மைக்கை மாட்டாமல் பேசுவது, ரகசியம் பேசுவது, வேறு மொழிகளில் பேசுவது, எழுதி காட்டுவது என செய்தீர்கள் என்றால் நானே ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விடுவேன் என விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X