திமுகவுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கமல்ஹாசன்.. நேரம் பார்த்து இறக்கிவிட்ட பிரபலம்!
சென்னை: தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முறை நான்கு முனைப் போட்டியாக தேர்தல் களம் இருக்கும் என்று கூறப்படுவதால் அரசியல் கட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. இப்படி இருக்கையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற நடிகர் கமல்ஹாசன், அவரது கட்சி போட்டியிடுவதற்காக கேட்ட சீட்டுகள் கிடைக்காததால், திமுக கூட்டணியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தமிழ்நாடு முழுவதும் வேலை செய்யும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
இதனால் திமுக கூட்டணி குறித்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் கமல்ஹாசன் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை காட்டமாக விமர்சித்து பதிவிட்ட எக்ஸ் தள பதிவை பகிர்ந்து, " 2021 தேர்தலில் திமுகவை வீழ்த்த.. எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் பாடலை ஆண்டவர் ஆவேசமாக பாடிய போது.." என்று பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். இவரது கட்சி 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தொகுதிகளை வெல்லவில்லை என்றாலும், 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2.6 சதவீதம் வாக்குகளை வென்றது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.
இப்படி இருக்கையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றினார். அவரது கட்சி போட்டியிடவில்லை என்றாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் நீதி மய்யத்திற்கு கொடுக்கப்படும் என்ற உடன்படிக்கையின் படி திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதுவும் தனது வாகனத்தில் தான் பிரச்சாரம் செய்தார்.

ஆதரவு: இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் எப்படியும் 5 முதல் 7 தொகுதிகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்த தொகுதிகளை திமுக ஒதுக்க சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லியும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
விளாசல்: இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் இந்த நிலையை குறிப்பிட்டு, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுகவை விமர்சிக்க, எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றைப் பகிர்ந்திருந்தார், அதாவது, " சிலர் ஆசைக்கும் தேவைக்கும்...வாழ்வுக்கும் வசதிக்கும்...
ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானமில்லை...அதில் ஈனமில்லை...
அவர் எப்போதும் வால் பிடிப்பார்...
எதிர் காலம் வரும்...என் கடமை வரும்...
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்..." என்று பகிர்ந்ததைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











