தளபதி 67ல் விஜய்யுடன் இணையும் கைதி, விக்ரம் பட பிரபலம்… அப்போ இதுவும் லோகேஷ் யுனிவர்ஸ் தானா?
சென்னை: விஜய்யின் தளபதி 67 படத்தின் அபிஸியல் அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கைதி, விக்ரம் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த பிரபலமும் தளபதி 67ல் இணைந்துள்ளதால், இந்தப் படம் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விரைவில் தளபதி 67 அப்டேட்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 67ல் விஜய் - லோகேஷ் கூட்டணி, மீண்டும் இணைகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'தளபதி 67' படம் குறித்து டிசம்பரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் இனி இயக்கும் படங்களை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஃபார்மேட்டில் எடுப்பேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனால், தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் யுனிவர்ஸ் பின்னணியில் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

விஜய்யுடன் இணையும் பிரபலம்
இந்நிலையில், தளபதி 67 படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கைதி படத்தில் பிஜாய் என்ற கேரக்டரில் நரேன் நடித்திருந்தார். டில்லி கேரக்டரில் வரும் கார்த்திக்கு பிஜாய் தான் டாஸ்க் கொடுத்திருப்பார். அதே பிஜாய் கேரக்டர் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் ட்ராவல் ஆனது. விக்ரம் படத்திலும் நரேனின் பிஜாய் கேரக்டர் தான் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், தளபதி 67 படத்தில் நடிப்பதாக சமீபத்திய பேட்டியில் நரேன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
தளபதி 67ல் நரேனும் இணைந்துள்ளதால், இதுவும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருக்கும் என உறுதியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோரும் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் விக்ரம் கேரக்டரிலும் சூர்யா ரோலக்ஸ், கார்த்தி டில்லி ஆகிய பாத்திரங்களிலும் நடிக்க உள்ளார்களாம். கைதி தொடர்ச்சியாக விக்ரம் படம் உருவானதை போல, விக்ரம் தொடர்ச்சியாக தளபதி 67 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கமல், சூர்யா, கார்த்தி
ஏற்கனவே தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால், சஞ்சய் தத், கெளதம், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இப்போது கமல், சூர்யா, கார்த்தி மூவரும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என்ற தகவல் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது. மேலும், தளபதி 67ல் இருந்து கதை இன்னும் புதிய கோணத்தில் பயணிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தளபதி 67 படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











