தீபாவளி ஓவர்.. இனி பாலாவுக்கு வேட்டு வைக்க வேண்டியது தான்.. புடிச்சு அந்த ஜெயில்ல போடுங்க பாஸ்!

சென்னை: என்னடா நடக்குது இங்க என்கிற மாதிரி, ஆஜீத் கேப்டன் ஆகிறார், பாலா போரிங் போட்டியாளர் ஆகிறார். அதை சொல்றது யாருன்னு பார்த்தா ஜித்தன் ரமேஷ். நல்லா இருக்கே இன்றைய முதல் புரமோ!

Recommended Video

Rajinikanth, Keerthy Suresh, Sneha & Other Celebrities Diwali celebration

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, போரிங் போட்டியாளரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லவில்லை என்றாலும், எந்த வேலையையும் செய்யாமல் விட்டா அப்புறம் எனக்கு என்ன மறியாதை என கமல் செம கோல் போடுகிறார்.

பாலாவை நிச்சயம் இந்த வாரம் கண்ணாடி ஜெயிலில் புடிச்சு போடுவாங்க என்றே பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

நிஷாவுக்கு குவிகிறது பாராட்டு

நிஷாவுக்கு குவிகிறது பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிஷா அக்கா சக போட்டியாளர்களை ஹர்ட் பண்ணாமல் டீஸ் பண்ணது, எல்லோரையும் சிரிக்கவே வைத்தது. என்ன ஒரு திறமை நிஷா உங்களுக்கு என பிக் பாஸ் போட்டியாளர்கள், கமல்ஹாசன் மட்டுமின்றி ஏகப்பட்ட ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

தீபாவளி சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் பெர்ஃபார்ம்களை கண்டு ரசித்த கமல், போட்டியாளர்கள் அவர் நடித்த படங்களில் இருந்து வசனங்களை பேச கோரிக்கை வைக்க, கமல் டக்கு டக்குன்னு எல்லாத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு பேசி அசத்தியதை அப்படி பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஸ்தம்பித்து போயிருப்பார்கள்.

வேலையை ஆரம்பித்த கமல்

வேலையை ஆரம்பித்த கமல்

கொண்டாட்டங்கள் முடிந்து விட்ட நிலையில், பிக் பாஸுக்கு வந்த வறுத்தெடுக்கும் வேலையை ஆரம்பித்து, நிகழ்ச்சியை மீண்டும் சூடு பிடிக்க வேண்டும் என இன்றைய முதல் புரமோவில் கமல் சாட்டையை சுழற்றும் காட்சிகளை பார்க்கும் போதே தெரிகிறது. வச்சு செய்யுங்க ஆண்டவரே, ஒரு வாரமா வெறுப்பேத்திட்டாங்க, மீண்டும் மிரட்டல் பிக் பாஸ் கம்பேக் ஆகணும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாலா தான் பலி ஆடு

பாலா தான் பலி ஆடு

பிக் பாஸ் மறந்து விட்டாலும், நான் மறக்க மாட்டேன் எனக் கூறிய கமல், இந்த வாரம் யார் போரிங் போட்டியாளர் என கேட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டார். அதிலும் நம்ம ஜித்தன் ரமேஷ், முதல் ஆளாக பாலாவை எட்டிப் பார்க்க, சொல்லுங்க ரமேஷ் என கமல் கேட்க, பாலா தான் சார் என ஜித்தன் தனது ஜித்து வேலையை காட்டி கெத்து காட்டிட்டார்.

சொதப்பிய பாலா

சொதப்பிய பாலா

கடந்த இரு வாரங்களாக சொதப்பலாக கேம் ஆடி ஒட்டுமொத்த லக்சரி பட்ஜெட்டுக்கும் பாலாஜி முருகதாஸ் வேட்டு வைத்த விவகாரத்தை, மறக்காமல் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் கமல் கேட்டு விளாச உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது. ஜித்தன் ரமேஷ் முன் மொழிந்ததை நிச்சயம் ஹவுஸ்மேட்கள் வழி மொழிவார்கள் என்றே தெரிகிறது.

ஜெயில்ல புடிச்சு போடுங்க சார்

ஜெயில்ல புடிச்சு போடுங்க சார்

பிக் பாஸ் வீட்டில் ஆடியன்ஸா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜித்தன் ரமேஷே பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கில், சனம் ஷெட்டிக்கு ஜோடி போட்டு செம அரட்டை அடித்தார். அவரே பாலாவை போரிங்னு சொன்னா சரியாத்தான் பா இருக்கும் என ரசிகர்களும், முதல்ல அந்த பாலாவ ஜெயில்ல புடிச்சு போடுங்க கமல் சார் என கொந்தளித்து வருகின்றனர்.

வாதாடிய பாலா

வாதாடிய பாலா

அந்த ஒரு டாஸ்க்கை மட்டும் வைத்து எப்படி போரிங் என முடிவு பண்ணலாம். நடந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வின் பண்ணியிருக்கேனே என பாலாவும் தன் பங்குக்கு வாதாடுகிறார். ஆனால், அதை மற்ற போட்டியாளர்கள் ஒத்துக்கிறீங்களா என கமல் கேட்கும் நிலாவும் மயான அமைதி பாலாவுக்கு ஊதும் சங்கு என்றே தெரிகிறது. பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X