ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது!

சென்னை: பொதுவா தான் எந்தவொரு பண்டிகை மீதும் பெரிய நாட்டம் கொள்ள மாட்டேன் என்றும், ஆனால், ஆயுத பூஜை பிடிக்கும் என்றும் கமல் ஆரம்பத்திலேயே ஆயுத பூஜை வாழ்த்து சொல்லி நிகழ்ச்சியை அட்டகாசமாக தொடங்கினார்.

கடவுள் இருந்தா நல்லா இருக்கும் என சொல்லும் பகுத்தறிவாளரான கமல், ஆயுதங்களை போற்றும் பண்டிகை எப்படிங்க புறக்கணிக்க முடியும் என்றும் வாதாடி விட்டார்.

அனிதாவின் புலம்பலை தொடர்ந்து சனிக்கிழமை நிகழ்ச்சிக்காக ரெடியான ஹவுஸ்மேட்ஸ் கமல் சார் வருகை பார்த்து சந்தோஷமடைந்தனர்.

ஏகப்பட்ட பண்டிகைகள்

ஏகப்பட்ட பண்டிகைகள்

கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு தாமதமாகவே துவங்கியது. எந்தவொரு கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் இருக்கும் என்பது இந்த விஷயத்திலும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் என எல்லா பண்டிகைகளையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடுவதை கண்டு ரசிக்கலாம்.

4 மடங்கு சந்தோஷம்

4 மடங்கு சந்தோஷம்

ஒரு மணி நேரம் தினமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை காணவே கோடிக்கணக்கான ரசிகர்கள், விஜய் டிவியையும் ஹாட்ஸ்டாரையும் விரும்பி பார்க்கின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் சில மாதங்களாக பின் தங்கி இருந்த விஜய் டிவி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டது. நாளை 4 மணி நேரம் ஒளிபரப்பாவது போலவே, தீபாவளி மற்றும் பல பண்டிகைகளின் போதும் 4 மணி நேர நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது.

ஆயுத பூஜை பிடிக்கும்

ஆயுத பூஜை பிடிக்கும்

பொதுவாவே நான் பண்டிகைகளை எல்லாம் பெரிதும் விரும்புவதில்லை என சொன்ன கமல், ஆனால், இந்த ஆயுத பூஜையை மட்டும் கொஞ்சம் பிடிக்கும் என்றார். ஆயுதங்களை போற்றும் நாள் அல்லவா என சந்தோஷமாக சொன்ன கமல், ஆயுத பூஜை குறித்த பல்வேறு சிறப்புகளையும் எடுத்து பேசினார்.

சுத்தப்படுத்தி

சுத்தப்படுத்தி

எப்போதுமே நமக்கு உதவும் ஆயுதங்களை சுத்தப் படுத்தி வைக்க ஒரு பண்டிகை இருப்பது நல்ல விஷயம் தான். அதனை நாம் கொண்டாடுவதில் தவறு இல்லை. கொண்டாட வேண்டும் என்பதை கமல்ஹாசன் அழகாக எடுத்துரைத்தார். வாகனம் முதல் தினமும் நாம் பயன்படுத்தும் கருவிகளை போற்றுவது சிறப்பான விஷயம் என்றார்.

இந்தியன் 2 விபத்து

இந்தியன் 2 விபத்து

ஏகப்பட்ட அறிவாளிகள் நம்மிடம் இருந்த போதும், இன்னமும் சினிமா உள்ளிட்ட பல விஷயங்களில் தேவையான கருவிகள் கண்டு பிடிக்கவில்லையே.. ஒரு பக்கம் ராக்கெட் விடுறோம் ஒரு பக்கம் என விமர்சித்தார். இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமான கிரேன் சினிமா கருவி இல்லை என்பதை மறைமுகமாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X