ஆடை, அடக்கம் பற்றி தாமரைக்கு கிளாஸ் எடுத்த கமல்.. மகாத்மா காந்தி வரலாற்றை தொட்டு விளக்கம்!

சென்னை: நகரத்து பெண்கள் அடக்க ஒடுக்கமாக ஆடை அணியவில்லை என்கிற கருத்தை தாமரை முன் வைத்த பஞ்சாயத்து குறித்து பேசிய கமல் சிபியின் கருத்தை பாராட்டினார்.

மேலும், ஆடை சுதந்திரம் குறித்த தனது கருத்தையும் முன் வைத்து பேசி தாமரை செல்விக்கு விவரமாக புரியும்படி வகுப்பெடுத்தார்.

'Half Naked Fakir' என மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தையும் குறிப்பிட்டு விளக்கம் கொடுத்தார்.

ஆடை சுதந்திரம்

ஆடை சுதந்திரம்

பிக் பாஸ் வீட்டில் நகரத்து பெண்கள் மோசமாக ஆடை அணிவது போன்ற கமெண்ட்டை தாமரை செல்வி பட்டிமன்ற டாஸ்க்கில் முன் வைத்தது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக சுருதியை குறி வைத்தே தாமரை தாக்கி பேசியிருந்தார். அதற்கு சிபி அப்போதே பதிலடி கொடுத்த நிலையில், அது தொடர்பான விவாதத்தை கமல் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் முன் வைத்து ஆடை சுதந்திரம் நமக்கு கிடைத்து வெகு நாட்கள் ஆகிறது என தாமரைக்கு அட்வைஸ் செய்வது போல பலருக்கும் அட்வைஸ் செய்து விட்டார்.

ஹாஃப் நேக்கட் ஃபகீர்

ஹாஃப் நேக்கட் ஃபகீர்

பாரிஸ்டர் பட்டம் வென்ற மகாத்மா காந்தி இங்கிலாந்திற்கு அரைநிர்வாண கதர் ஆடையை மட்டுமே உடுத்திக் கொண்டு சென்று இந்தியாவிற்காக வாதாடினார். அவரை பார்த்த வின்ஸ்டன் சர்ச்சில் Half Naked Fakir என குறிப்பிட்டு இருந்த வரலாற்று சம்பவத்தையும் வழக்கம் போல தொட்டுக் கொண்டு ஆடை சுதந்திரம் நமக்கு கிடைத்து வெகு நாட்கள் ஆகிறது என விளக்கி இருந்தார் கமல்.

அவரவர் விருப்பம்

அவரவர் விருப்பம்

எப்படி ஆடை அணிவது, எந்த ஆடையை அணிவது என்பது அவரவர் விருப்பம். குறிப்பாக பெண்கள் அணியும் ஆடை குறித்து விமர்சனம் செய்வது செய்பவரின் மன எண்ணத்தை பொறுத்தது தான் என்றும் ஆடை பற்றிய தேவை இல்லாத பார்வை தேவையே இல்லை என கமல் வெளிப்படையாக பேசி தாமரைக்கு புரிய வைத்தார்.

சரண்டரான தாமரை

சரண்டரான தாமரை

புள்ளைங்களாம் இப்படி துணி உடுத்தி நான் பார்த்ததே இல்லை சார்.. படத்தில் தான் பார்த்து இருக்கேன் என கமல் சொன்ன விளக்கத்தை கேட்டு அப்படியே சரண்டர் ஆகி விட்டார் தாமரை. ஆடை குறித்து பேசிய ராஜுவுக்கும் தாமரைக்கும் இது இப்போ புரிந்திருக்கும் என தாமரையை இந்த பிரச்சனையில் இழுத்து விட்ட ராஜுவையும் சுட்டி காட்டி பேசினார் கமல்.

சண்டையே நடக்கும்

சண்டையே நடக்கும்

அடக்கம் பற்றி சிபி சொன்னதும் உங்களுக்கு ஏன் அப்படி கோபம் வந்தது என தாமரையிடம் கமல் கேட்க, எங்க ஊரில் எல்லாம் பெண்கள் இப்படி அடக்க ஒடுக்கமா துணி உடுத்தலைன்னா நடக்கிறதே வேறு சார் என பேச, சென்னையில் யோவ் பர்ஸ் கீழ விழுந்தது என சொன்னால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்க ஊரில் எல்லாம் யோவ் என சொன்னதை கேட்டு விட்டு பர்ஸ் போனால் கூட பரவாயில்லை என யோவ் என சொன்னதற்காக சண்டையே நடக்கும்,

கதை முடிந்து விட்டால்

கதை முடிந்து விட்டால்

கிட்டத்தட்ட டேய் என சொன்னதற்கு அர்த்தம் தான். அங்கெல்லாம் அய்யா என்று தான் அழைப்பார்கள் என்றார். பேசுவதற்கு முன்பாக அந்த வார்த்தையை தாமரை தான் பயன்படுத்தினார் என்று தாமரையை வெளுத்து விட்ட கமல் அடக்கத்தில் பல பொருள் இருக்கு நாவடக்கமும் அடக்கத்தில் வரும் அடக்கத்தில் ஆண் பெண் பேதம் இல்லை. கதை முடிந்து விட்டால் எல்லாரும் அடக்கம் தான் என செம பஞ்ச் போட்டு அந்த பஞ்சாயத்தை முடித்தார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X