twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழாயடி சண்டை.. நீங்க ஜாலியா பண்ணீங்க.. நாட்டுல தினமும் ரொம்ப மோசமா அது நடக்குதே.. கமல் சுளீர்!

    |

    சென்னை: பிக் பாஸ் மேடையை கேப் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் மேடையாக கமல் முதல் சீசனில் இருந்தே பயன்படுத்தி வருகிறார்.

    அதே போல சமூக கருத்துக்களையும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி விதைத்து வருகிறார்.

    இந்த வாரம் நடந்த குழாயடி சண்டையை பாராட்டிய கமல், நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இன்னமும் இந்த சண்டை நடப்பது வேதனை என்றார்.

    கோர்த்து விடுறதுன்னா இதுதானா கமல்.. ஆரி பூரி ஆகாம இருந்தா சரி.. சண்டையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!கோர்த்து விடுறதுன்னா இதுதானா கமல்.. ஆரி பூரி ஆகாம இருந்தா சரி.. சண்டையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

    அந்த காலம்

    அந்த காலம்

    அந்த காலம் டாஸ்க் என அடிக்கடி சொன்னாதான் தெரியுது, சாமானிய மனிதர்கள் இன்றும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது, நைட் வரும் குல்பி வாங்கி சாப்பிடுவது என எல்லாமே நடந்து கொண்டு தான் இருக்கிறது. நேரத்தை கணிப்பது மட்டுமே நடக்காமல் இருக்கிறது. அந்த காலத்திலும், நேரத்தை இப்படியெல்லாம் கணித்திருப்பார்களா? என்பது கேள்விக் குறிதான்.

    ஃபேக் குழாயடி சண்டை

    ஃபேக் குழாயடி சண்டை

    நிஜ வாழ்வில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் குழாயடி சண்டையை பிக் பாஸ் வீட்டில் காட்டுவதற்காக, நிஷாவும், அர்ச்சனாவும் போட்ட ஃபேக் குழாயடி சண்டையை கமல் நன்றாகவே ரசித்ததாக பாராட்டினார். ஆக்டிங்னா அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் அல்வா சாப்பிடுறமாதிரி பிசிக்கல் டாஸ்க்னா வேணாம் பாஸ்.

    நீர் அரசியல்

    நீர் அரசியல்

    அரசியல்வாதிகளின் அலட்சியத்தால், வருமானத்தால், ஏகப்பட்ட ஏரி, குளங்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் வீடுகளாகி விட்டன. ஒரு மழை பொழிந்தால், வெள்ளக் காடாக மாறுவதும், நல்லா வெயில் அடித்தால், சொட்டு நீருக்கு முண்டி அடித்து ஓடுவதுமாக இருக்கும் நீர் அரசியலையும் கமல் நல்லாவே பேசினார்.

    நிஜ சண்டை

    நிஜ சண்டை

    இன்னமும் நிஜத்தில் பயங்கரமான குழாயடி சண்டைகள் எல்லாம் நடந்து வருகிறது. பெரிய ஆட்கள் பத்து குடம் ஏமாற்றி பிடிப்பதும், பலமில்லாதவர்கள் ஒரு குடத்திற்கு அலையும் அவல நிலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்கிற நிதர்சனத்தையும் கமல் பேசி அரசியல்வாதிகளுக்கு எதிரான சாட்டையை சுழற்றினார்.

    English summary
    Kamal Haasan talks about drinking water issues and enjoys Archana and Nisha acting in time task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X