அதை எல்லாம் காதுலயே வாங்காம வந்துட்டேன்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி பேசிய கமல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கும் போது கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக்க போகிறார் என்பதை கேட்டதும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகினர்.
சும்மா கொஞ்சம் நாள் வந்துட்டு போயிடுவாரு என்றும், பிக் பாஸ் எதுக்கு என்றும் ஏகப்பட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்தன.
அடுத்த சீசனில் வேற தொகுப்பாளர் மாறுவார் என ஒவ்வொரு சீசனுக்கும் பேசியவர்கள் வாய் அடைக்கும் அளவுக்கு 4வது சீசன் வரை கெத்தாக நடத்தி வருகிறார்.

இந்தியன் தாத்தா காஸ்ட்யூம்
இந்தியன் தாத்தா காஸ்ட்யூம் போல சூப்பரான பச்சை நிற காஸ்ட்யூமில் கமல்ஹாசன் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் செம சூப்பராக தோன்றினார். ஆனால், இந்தியன் 2 படம் தான் எப்போ வரும் என தெரியவில்லை. லைகா நிறுவனம் அந்த படத்தின் தயாரிப்பு பணிகளை எப்போது ஆரம்பிக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

50 நாட்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றோடு 50 நாட்கள் ஆகிறது. அதற்காகத் தான் இப்படியொரு பிரத்யேகமான உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தேன் என்கிற ரகசியத்தையும் கமல் வெளியிட்டார். 50 நாள் ஆகியும் வீடு நிறைஞ்சே இருக்கே கமல் அய்யா, எப்போதான் களை எடுப்பீங்கன்னு கேட்டு வராங்க..

ஏன் போறிங்கனு கேக்குறாங்க
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போறீங்கன்னு ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகின்றனர். இப்போ கூட, இந்த கொரோனா காலத்தில் ஏன் போறீங்கன்னு ரொம்பவே அக்கறையாகவும், அந்த நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களை சுட்டிக் காட்டியும் கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் பேச்சுக்களை எல்லாம் காதில் வாங்காமல் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன் என்றார் கமல்.

இருட்டு அறையில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்ததற்கு முக்கிய காரணமே மக்களின் முகங்களை பார்த்து நேரில் பேச வாய்ப்பு கிடைத்த காரணத்திற்காகத் தான். ஆனால், கொரோனா காலம் என்பதால், இப்போது, வெறும் இருட்டறையில் பேசும் நிலை வந்து விட்டது என்று கூறிவிட்டு, சட்டென டிஜிட்டல் திரைக்கு நன்றி எனக் கூறிவிட்டு சில ரசிகர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார்.


Click it and Unblock the Notifications











