அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் ஸ்டாலின்.. அப்பாவை விட்டுட்டு வந்திருக்காரு உதயநிதி.. கமல் பேச்சு!
சென்னை: விக்ரம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பற்றி கமல் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடத்தி வரும் கமல்ஹாசன், அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் ஸ்டாலின் என பேசியுள்ளார்.
மேலும், நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவை விட்டு விட்டு இங்கே எனக்காக வந்திருக்கிறார் உதயநிதி என்றும் கமல் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நண்பர் ஸ்டாலின்
விக்ரம் விழாவில் மேடையேறி பேசிய உதயநிதி ஸ்டாலின் கமல் சாரை யாரும் மிரட்ட முடியாது எனக் கூறியிருந்தார். கடைசியாக விழா நாயகனான கமல் பேசும் போது, ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் என்றார். 25 வயசுலேயே எங்கள் பயணத்தை கணித்தவர்கள் நானும் ஸ்டாலினும் என்றார்.

நெஞ்சுக்கு நீதி பார்க்கும் ஸ்டாலின்
விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை மு.க. ஸ்டாலின் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற தகவலையும் கமல் மேடையில் கூறினார்.

அப்பாவை விட்டுட்டு வந்துட்டாரு
அங்கே அப்பா நெஞ்சுக்கு நீதி பார்த்துட்டு இருக்காரு, அவரை விட்டு விட்டு எனக்காக இங்கே வந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். வரும் மே 20ம் தேதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகும் நிலையில், கூட விக்ரம் படத்தின் வெளியீட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கிய உதயநிதி குறித்து கமல் பேசியதும், கமலுக்கு புன்னகையுடன் வணம் வைத்தார் உதயநிதி.

தனியா ஒரு தம்பிக்கு நன்றி சொல்லணும்
கடைசியாக பேசிய கமல், தனியா ஒரு தம்பிக்கு நன்றி சொல்லணும். கடைசி நேரத்தில் வந்து முக்கியமான காட்சியில் நடித்துக் கொடுத்து விட்டு சென்று இருக்கிறார் என சூர்யாவுக்கு தனது நன்றியை கமல்ஹாசன் மேடையில் தெரிவித்தார். முன்னதாக சூர்யாவின் காட்சியை ரகசியமாக வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால், கசிந்து விட்டது என லோகேஷ் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











