twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாடைக்கு போடுறதுக்கு மாஸ்க் இல்லை.. நான் ஏன் மாஸ்க் போடாம ஷோ பண்றேன் தெரியுமா.. கமல் விளக்கம்!

    |

    இடைவெளியை நாம் சரியாக கடைபிடிக்க வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் சூப்பராக பாடம் எடுத்துள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவின் போதே, கொரோனா போராளிகளுக்கு ராயல் சல்யூட் வைத்தே நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொடங்கினார்.

    இந்நிலையில், 14ம் நாள் எபிசோடில், தான் ஏன் மாஸ்க் போடாமல் ஷோ நடத்துகிறேன் என்பதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

    அடேய்.. ஷிவானி செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. தீயாய் பரவும் மரண மாஸ் மீம்!அடேய்.. ஷிவானி செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. தீயாய் பரவும் மரண மாஸ் மீம்!

    கமல் மீது விமர்சனம்

    கமல் மீது விமர்சனம்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் வந்து ரசிகர்களையும், ஹவுஸ்மேட்களையும் உற்சாகப்படுத்தும் உலக நாயகன் கமல்ஹாசன், ஏன் மாஸ்க் அணிவதில்லை என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. அதற்கு இன்றைய ஷோவின் ஆரம்பத்திலேயே விளக்கம் கொடுத்து விட்டார் கமல்.

    கொரோனா போகவில்லை

    கொரோனா போகவில்லை

    ஒன்றரை மாதங்களில் எல்லாம் இந்த கொரோனா போய்விடும் என்றும், போயிடுமா சார் என நான் என்னவோ டாக்டர் மாதிரி நினைச்சிகிட்டு என்கிட்டயே கேட்டாங்க.. ஆனால், இந்த தொற்று, அவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டுப் போகுமா என்பது தெரியவில்லை. நாம் தான் முன்னெச்சரிக்கையுடன் நமது நியூ நார்மல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றார்.

    தாடைக்கு போடுறதுக்கு மாஸ்க் இல்லை

    தாடைக்கு போடுறதுக்கு மாஸ்க் இல்லை

    மேலும், ஏகப்பட்ட மக்கள் மாஸ்க்கை தாடைக்கு போட்டு வருகின்றன. மூக்குக்கு கீழ், தாடைக்குலாம் போடுறதுக்கு பேர் மாஸ்க் இல்லைங்க, இன்னுமொரு முக்கியமான விஷயம், மாஸ்க்கை உள்ளே தொடக் கூடாது. உங்க உள்ளங்களை எல்லாம் தொடுவதற்கு தான் நான் இங்கே வந்துருக்கேன் என கொஞ்சம் சுய புரமோஷனையும் செய்து கொண்டார்.

    நான் ஏன் மாஸ்க் போடல

    நான் ஏன் மாஸ்க் போடல

    சமூக வலைதளங்களில் கமல் ஏன் மாஸ்க் போடாம ஷோ பண்றாரு என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், நாங்க இங்க ஷோ பண்றதுக்கு முன்னாடி, ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்து விட்டுத் தான் ஷோ பண்றோம். 6 அடி டிஸ்டன்ஸ் இல்லை, என்னை சுற்றி 60 அடி தூரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க அதனால், தான் மாஸ்க் போடாமல் மக்களுக்காக இந்த ஷோ பண்றேன் என்றார்.

    கமலுக்கு நாற்காலி

    கமலுக்கு நாற்காலி

    சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஷோவை பண்றேன், டிரெஸ் மாத்திட்டு வரேன் என கமல் பேசும் போதே, இரு நாட்களுக்கான ஷோவையும் ஒளிப்பதிவு செய்றாங்க என்பதை எல்லாம் புட்டு புட்டு வைத்து விட்டார். ரொம்ப நேரம் டிராபிக் கான்ஸ்டபிள்கள் வெயிலில் நின்றபடி கஷ்டப்படுவதை சுட்டிக் காட்டி, தனக்கு ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டார். சீக்கிரமே அந்த நாற்காலியும் கமலுக்கு கிடைக்குமா? என்பதை பார்ப்போம்.

    கைக்கு மாஸ்க்

    கைக்கு மாஸ்க்

    முகத்தில் மாஸ்க் போடாத கமல், கைக்கு அதுவும் ஒரு விரலுக்கு மாஸ்க் அணிந்து வந்திருந்தார். எவிக்‌ஷன் பண்ணும் ஆள் யார் என்பதை காட்டவே கைக்கு மாஸ்க் போட்டுட்டு வந்துருக்கேன் என்றும், கோட்டை கழட்டி விட்டு, கன் ஷூட் பண்ண போகிறேன் என்பது போல, கமல் சார் கொடுத்த போஸ் எல்லாம் வேற லெவல்.

    English summary
    Kamal Haasan talks about Social distancing in Bigg Boss Tamil 4 show and advised people to wear masks properly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X