இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முதல் புரமோவில் செங்கோலுடன் நின்று கொண்டு டபுள் மீனிங்கில் அரசியல் கமெண்ட் அடித்த கமல், இந்த புரமோவில், நேரடியாக சனம் ஷெட்டியை விளாச ஆரம்பித்து விட்டார்.

சனம் ஷெட்டிக்கு ஆதரவாக மொட்டை சுரேஷும் ஏன் கை தூக்கினார் என்று தான் ரசிகர்கள் இப்போ குழம்பிப் போயுள்ளனர்.

கமல் கைக்கு செங்கோல் வருமா?

கமல் கைக்கு செங்கோல் வருமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து அரசியல் புரமோஷன் நல்லாவே பண்ணி வருகிறார் கமல்ஹாசன். 2வது சீசனில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவை சர்வாதிகாரியாக மாற்றி அரசியல் அட்டகாசம் பண்ணி இருந்தார். இந்நிலையில், வரும் தேர்தலை முன்னிட்டு அரசாள போகிறேன் என்பதை சிம்பாளிக்கா செங்கோலை கையில் வைத்துக் கொண்டு, சொல்கிறார்.

என்ன அசிங்கப்பட்டவரே கை தூக்குறாரு

என்ன அசிங்கப்பட்டவரே கை தூக்குறாரு

நான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும் என கமல் ஆரம்பமே அதிரடி போடுகிறார். வன்முறை தப்புத்தான் என சனம் ஷெட்டி பண்ணதை லேசாக பேசிவிட்டு, சனம் ஷெட்டி பக்கம் நியாயம் இருக்குன்னு நினைக்கிறவங்க கை தூக்குங்க என சொன்னதும், சுரேஷ் தாத்தா உள்ளிட்ட பலரும் கை தூக்குவதாக உள்ள புரமோவை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

எடிட்டர் லீலையா

எடிட்டர் லீலையா

அந்த சீனுக்குத் தான் எல்லாரும் கை தூக்குனாங்களா? இல்லை வேறு ஒரு கேள்விக்கு எல்லாரும் கை தூக்குனாங்களா என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும், புரமோவில் பரபரப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக நம்ம பிக் பாஸ் எடிட்டர் செய்த லீலையாக கூட இது இருக்கலாம். வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஒத்திகை பார்த்து விட்டு

ஒத்திகை பார்த்து விட்டு

சுரேஷ் தாத்தா அடித்ததும் தெரியாம அந்த கோபம் வந்துடுச்சான்னு நினைக்கும் போது, அதுலேயும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்குன்னு கமல் சார் சொல்லும் போது தான், அப்பாடா, இப்போ தான் பாயின்ட்டுக்கு வருகிறார் கமல் என ரசிகர்கள் உற்சாகமடைய ஆரம்பித்து விட்டனர். மேலும், வேல்முருகன் கூட ஒத்திகை பார்த்து விட்டு பிளான் பண்ணித் தான் தாத்தாவை "ஏய் வெளிய வாடான்னு" சனம் திட்டியதாகவும் கமல் குறும்படம் போட்டுக் காட்டுவாரா? என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது.

இங்கிதத்தை இழந்த சனம்

இங்கிதத்தை இழந்த சனம்

உடனே வேல்முருகன், என்னை எல்லாம் அவர் அடிச்சருன்னா, வயசானவருன்னு கூட பார்க்க மாட்டேன்னு என சனம் ஷெட்டி பேசியதை போட்டுக் கொடுக்கிறார். அதான், வயசுக்காக பார்க்குறேன்னு சொன்ன அந்த இங்கிதத்தை இழந்துட்டாங்க என கமல், நடிகை சனம் ஷெட்டியை நல்லாவே இன்னைக்கு வச்சு விளாசுவாருன்னு எதிர்பார்க்கலாம்.

அட்லீஸ்ட் மன்னிப்பு

அட்லீஸ்ட் மன்னிப்பு

அர்ச்சனா அக்காவுக்கும் இன்றைய எபிசோடில் சில குட்டுகள் கிடைக்கும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாலாஜி சொன்ன ஒரு தலை பட்சம் பத்தியும் கமல் பேசுவார் என்றே தெரிகிறது. நிச்சயம், அர்ச்சனா சனம் ஷெட்டியை சுரேஷ் தாத்தாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லத் தவறியதை கமல் சொல்ல வைப்பார் என்பது தெரிகிறது. இன்னைக்கு சம்பவம் நடக்குமா? சப்புன்னு போகுமான்னு பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X