Vichithra - விசித்திராவின் கணவருக்கு நன்றி சொன்ன கமல் ஹாசன்.. ஏன் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Vichithra (விசித்திரா) விசித்திராவின் கணவர் ஷாஜிக்கு கமல் ஹாசன் நன்றி தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது களைகட்டியிருக்கிறது. நேற்று ஆர்.ஜே.பிராவோ எவிக்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் இரண்டு பேர் வீட்டுக்குள் வருவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் விஜய் வர்மாவும், அனன்யா ராவும் என கூறப்படுகிறது. இதனால் மேலும் இந்த நிகழ்ச்சி சுவாரசியம் கூட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பூகம்பம் டாஸ்க்: கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. வாழ்க்கையில் பூகம்பம் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் தனது வாழ்வில் பூகம்பம் ஏற்படுத்திய நிகழ்வினை சொல்ல வேண்டும். அதில் விசித்திரா சொன்ன சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.
விசித்திரா சொன்ன சம்பவம்: அவர் அந்த டாஸ்க்கில் பேசுகையில், “ஒரு டாப் ஹீரோ படத்தில் நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாள் என்னை பார்த்த அவர், எனது பெயரைக்கூட கேட்காமல்; இன்று இரவு என்னுடைய அறைக்கு வந்துவிடு என்று சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவருடைய ஆட்களை அனுப்பி எனது அறை கதவை தட்ட வைத்தார்.
அதுமட்டுமின்றி ஒரு ஆக்ஷன் காட்சி படமாக்கும்போது என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். அதை சண்டை பயிற்சியாளரிடம் சொன்னபோது அவர் என்னை ஓங்கி அறைந்துவிட்டார். எனக்கு திரைத்துறையிலிருந்து யாருமே ஆதரவாக நிற்கவில்லை. அதனால்தான் நான் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டேன். நடிகர் என்னை தொந்தரவு செய்தபோது அந்த ஹோட்டலின் மேனேஜர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையை எனக்கு ஒதுக்கிக்கொடுத்தார். அவர்தான் இப்போது எனது கணவர்” என்றார்.
பாலகிருஷ்ணா: விசித்திராவின் இந்தப் பேச்சு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் கூறிய ஹீரோ பாலகிருஷ்ணா என்று நெட்டிசன்கள் கூற ஆரம்பித்தனர். மேலும் பாலைய்யாவுக்கு எதிராக ட்விட்டரில் பதிவுகளையும் போட்டனர். இந்த சூழலில் நேற்று கமல் ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசும்போது ஆரம்பமே விசித்திரா விஷயத்தை தொடார்.
கமல் சொன்ன நன்றி: அவர் பேசுகையில், “இன்று நான் ஒருவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளையும் தன்னைப் போலவே நல்லவராக வளர்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் நன்றி சொன்ன நபரின் பெயர் ஷாஜி. விசித்திராவின் கணவர். அவரிடம் பேசியபோது ஒரு விஷயம் சொன்னார், 'விசித்திரா அந்த சம்பவத்துக்கு பிறகுதான் எனக்கு மனைவி ஆனார். ஆனால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் அப்படித்தான் நான் உதவியிருப்பேன்’ என்றார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
அதேபோல் விசித்திராவுக்கும் நாம் கைத்தட்ட வேண்டும். ஏனெனில் அவர் சொல்லியபோது அவரது சோகம் இருந்தது. ஆனால் மனதுக்குள் குரோதம் இல்லை. அந்த ஹீரோவின் பெயரை சென்சார் செய்துவிட்டார். ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசினார். அது அவரது பக்குவத்தை காட்டுகிறது” என்றார்.


Click it and Unblock the Notifications











