Kamal Haasan - அதை செய்வேன் என யாருமே நம்பவில்லை.. கமல் ஹாசன் ஓபன் டாக்
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கல்கி 2898 ஏடி படம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் சினிமாவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி விக்ரம் ரிலீஸுக்கு முன்னதாக ரிலீஸான பல தமிழ் படங்கள் தோல்வியடைந்திருந்தன. விக்ரம் வந்த பிறகுதான் அந்த நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது.

உற்சாகமான கமல்: விக்ரம் கொடுத்த வெற்றியால் பெரும் உற்சாகம் கமலுக்கு தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் தூசு தட்டப்பட்டது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக நடிப்பதற்கு கமிட்டும் ஆகியுள்ளார். இதனால் கமல் ஹாசனின் ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறது.
நடிப்பு மட்டுமில்லை: அதேபோல் நடிப்பு மட்டுமின்றி பட தயாரிப்பிலும் கமல் ஹாசன் பிஸி. அதன்படி சிம்பு நடிப்பில் ஒரு படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.
எவ்வளவு சம்பளம்?: கமல் ஹாசன் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தவர். அவர் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆச்சரியப்படவே செய்தனர். மேலும் இதில் நடிப்பதற்காக அவர் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அதற்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை 40 கோடி ரூபாய்தான் சம்பளம் என இப்போது கூறப்படுகிறது.
காமிக் கான் நிகழ்ச்சியில் கமல்: இந்தப் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அமெரிக்காவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்துக்கு படத்தின் மேக்கிங் இருக்கும்போல என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் காமிக் கான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல் ஹாசன் அளித்த பேட்டியில், "நான் இந்தப் படத்தில் நடிப்பேன் என யாருமே நம்பவில்லை.
கையை பிடித்து நன்றி சொன்னார்: படத்தின் ஹீரோவான பிரபாஸ் எனது கையை பிடித்துக்கொண்டு நன்றி சொன்னார். இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை; இதற்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள் என வியப்பதாகவும் அவர் கூறினார். இதில் பெரிய பெயர்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும் படத்தின் கன்ட்டெண்ட்தான் எல்லாத்தையும்விட பெரிது என்பதை அனைவருமே புரிந்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











