கொரோனாவில் இருந்து மீண்ட கமல்.. மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிரடி கம்பேக்.. வைரலாகும் புரமோ!

சென்னை: அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பரிபூரண குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உலகநாயகன் இவிபி பிலிம் சிட்டிக்கு பிக் பாஸ் ஷோ நடத்த கிளம்பி விட்டார்.

இந்நிலையில், கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் அட்டகாசமான முதல் புரமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குணமான கமல்

குணமான கமல்

கொரோனா தொற்று பரவிய நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த வாரமே கொரோனாவில் இருந்து குணமானாலும் மருத்துவர்களின் ஆலோசனையால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவிர்த்தார் கமல்.

கமலுக்கு பதில்

கமலுக்கு பதில்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் 5வது சீசன் வரை பல முறை இந்த சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார். புதிய தொகுப்பாளர்கள் வர போகிறார் என யூகங்கள் கிளம்பினாலும் கமல் அந்த நிகழ்ச்சியை எந்த காரணத்திற்காகவும் கைவிடவில்லை. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மட்டும் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கமல் வேண்டும்

கமல் வேண்டும்

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் முடிந்த வரையில் சூப்பராகவே நடத்திய நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தினால் தான் நல்லா இருக்கு. சீக்கிரம் குணமாகி உலக நாயகன் ஷோவை நடத்த வேண்டும் என்று பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தனர்.

உங்களால் மீண்டு வந்த நான்

உங்களால் மீண்டு வந்த நான்

உங்கள் நான் எனும் வாசகத்தை பஞ்ச் லைனாக பேசி வரும் கமல்ஹாசன் மீண்டும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிறு சூட்டிங்கில் பிசியாக பங்கேற்று வருகிறார். அவசர அவசரமாக சூட் செய்யப்பட்டு முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. உங்கள் அன்பினால் மீண்டு வந்த நான் என கமல் டிசர்ட் அணிந்து அதே எனர்ஜியுடன் தோன்றி ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி கூறியுள்ளார்.

சோலோ கேம்

சோலோ கேம்

கடந்த சீசனில் குரூபிசம் இருந்தது போல இந்த சீசனில் குரூபிசம் இல்லை என்பது போல போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடுகிறார்கள் என முதல் புரமோவில் கூறியுள்ளார். நட்பாக இருப்பதாக சொல்லிக் கொண்டு நடித்தாலும் சோலோ கேம் தெளிவாக தெரிகிறது எனும் கமல் வாதத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் ஆமோதித்து வருகின்றனர்.

ரெஸ்ட் எடுத்துருக்கலாமே

ரெஸ்ட் எடுத்துருக்கலாமே

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் இந்த வாரமே மீண்டும் தொகுத்து வழங்கியதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் உலக நாயகன் இன்னும் ஒரு வாரம் கூட ஓய்வெடுத்துவிட்டு வந்திருக்கலாம் என்றும், பிக் பாஸை விட அவருடைய உடல் நலன் தான் முக்கியம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X