Kamal: என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்.. 64 ஆண்டுகால சினிமா வாழ்க்கை.. கமல் பெருமிதம்!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமல் பதிவிட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

உலக சினிமாவின் உன்னத நடிகர்களுடன் போட்டிப் போடக் கூடிய ஒரு உயர்ந்த ஆளுமை நம் தமிழ் சினிமாவில் இருப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் என ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கமல் 64 ஐ கொண்டாடி வருகின்றனர்.

Kamal Haasan thanks note for fans after stepping into 64 years in Cinema Industry

63 ஆண்டுகளை கடந்த களத்தூர் கண்ணம்மா: 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி லீடு ரோலில் நடித்து வெளியான களத்தூர் கண்ணம்மாவில் சிறு பிள்ளையாக சினிமாவுக்குள் நுழைந்து இன்று உலக நாயகனாகவும் ரசிகர்களின் ஆண்டவராகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கமல்ஹாசன் சினிமாவில் 63 ஆண்டுகளை கடந்து 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ரசிகர்களின் ஆண்டவர்: உலக நாயகன் என்றும் ஆண்டவரே என்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் கமல்ஹாசன் இத்தனை ஆண்டு கால சினிமாவில் போடாத மேக்கப்பே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்.

Kamal Haasan thanks note for fans after stepping into 64 years in Cinema Industry

அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங்: கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து மீண்டும் தனது போட்டியாளரான சூப்பர்ஸ்டாரை உசுப்பி விட்டுள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்டான இந்தியன் 2 படத்துடன் விரைவில் களம் காண காத்திருக்கிறார்.

கமல் பெருமிதம்: "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

உங்கள்
நான்"

என ட்வீட் போட்டு ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு பெருமிதத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து பிரபாஸுக்கு வில்லனாக கல்கி படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X