KH 233: கமல் 233 படத்தின் தலைப்பு இதுவா? டைட்டிலிலேயே அடித்து தூக்க எச்.வினோத் போட்ட மாஸ்டர் பிளான்!
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 233வது படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. கமல்ஹாசனின் எந்த படமும் செய்யாத சாதனையை இத்திரைப்படம் பெற்றது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமல் 233 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
கமல்ஹாசனின் இந்தியன் 2: உலகநாயகன் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார். இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு, பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார் கமல்.
கமல் 233 திரைப்படம்: கல்கி படப்பிடிப்பைத் தொடர்ந்து, கமல் எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
மாஸான தலைப்பு: இந்நிலையில், கமல்ஹாசன் 233 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மர்மயோகி என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே தனது படத்திற்கு மர்மயோகி என பெயர் வைத்து இருந்தார். அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே டிராப்பாகிவிட்டது. இதனால், தற்போது உருவாக உள்ள கமலின் 233 படத்திற்கு இதே தலைப்பை வைத்துவிடலாம் என ஹெச்.வினோத் கமலிடம் கேட்டுள்ளார். இதற்கு கமல்ஹாசன் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











