25 லட்சத்துக்கு ரோலக்ஸ் வாட்ச்.. கமல்ஹாசன் முதல் நயன்தாரா வரை இந்திரஜாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்ன?
சென்னை: ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. சமீபத்தில் சென்னையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில், இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் தங்களுக்கு திருமணத்தில் வந்து குவிந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட பலர் பிரத்யேக பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கி உள்ளனர். அதை எல்லாம் பிரித்துப் பார்த்து வீடியோவை வெளியிட்டு சந்தோஷமாகி உள்ள இந்திரஜா சங்கர்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு காமெடி நடிகர்களும் தங்கள் வாரிசுக்கு இப்படி ஒரு திருமணத்தை நடத்தி இருக்க முடியாது என்கிற அளவுக்கு ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கர் திருமணத்தை நடத்தி உள்ளார்.
ரோலக்ஸ் வாட்ச்: சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் இந்திரஜா மற்றும் கார்த்திக்கு திருமண பரிசாக கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்கள் வழங்கியுள்ளனர். முதலில் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பிரித்துப் பார்த்த கார்த்திக் அது லேடி வாட்ச் ஆக இருக்கும் என நினைத்தார். அதைப் போலவே இந்திரஜாவுக்கான லேடி ரோலக்ஸ் வாட்ச் இருந்தது. இதே போல இன்னொரு பாக்ஸ் கொடுத்தாங்க என கரெக்டாக சொன்ன இந்திரஜா ரோலக்ஸ் மென் வாட்ச் டப்பாவையும் தேடி எடுத்து திறந்துக் காட்டினார்.
கமல் கொடுத்த பரிசு: வித்தியாசமான பூக்கள் அடங்கிய பொக்கே ஒன்றை உலக நாயகன் கமல்ஹாசன் கொடுத்தார். அவர் எப்போதுமே யூனிக்கான பரிசுப் பொருளையே கொடுப்பவர் என சொன்ன இந்திரஜா அவருக்காக ஒரு பாடலையும் பாடிக் காட்டினார்.
நயன்தாரா வீடியோ கால்: திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்காத நயன்தாரா பிகில் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த இந்திரஜா சங்கருக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் பொக்கேவுடன் மணமக்களை வாழ்த்தி எழுதிய கடிதம் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். ஒவ்வொரு பரிசுப் பொருளாக எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார் இந்திரஜா சங்கர். மேலும், பல விலையுயர்ந்த பொருட்கள் இந்திரஜா திருமணத்துக்கு பரிசாக வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











