twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 விவகாரத்திற்கு தீர்வு... களத்தில் இறங்கிய கமலஹாசன்

    |

    சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம், ஏறக்குறைய ஓராண்டிற்கு மேல் ஆகியுடன் மீண்டும் துவக்கப்படவில்லை. கிரைன் விபத்து, கொரோனா பரவல், கமலின் அரசியல் பணிகள் போன்ற பல காரணங்களால் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை மீண்டும் துவக்க முடியாத நிலை இருந்தது.

    நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி !நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

    இதனால் பொறுமையிழந்த ஷங்கர், அடுத்ததாக தான் இயக்க போகும் 2 படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதப் பொருளானது. ஷங்கரின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பால் கடுப்பான இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம், கோர்ட்டிற்கு சென்றது.

    முடிவுக்கு வராத இந்தியன் 2 விவகாரம்

    முடிவுக்கு வராத இந்தியன் 2 விவகாரம்

    இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் தனது மனுவில் கேட்டிருந்தது. இதனால் இருதரப்பும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க கோர்ட் அறிவுறுத்தியது. கோர்ட் அறிவுறுத்தலின் பேரில் இருதரப்பும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் முடிவு எட்டப்படவில்லை.

    சமாதானம் ஆகாத லைக்கா

    சமாதானம் ஆகாத லைக்கா

    இதற்கிடையில் 2 மாதங்களில் இந்தியன் 2 பட வேலைகளை துவங்கி, முடிப்பதாக ஷங்கர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையும் ஏற்க லைக்கா நிறுவனம் மறுத்து விட்டது. இதனால் இந்த பிரச்சனை முடிவில்லாமல் சென்றது. இதனையடுத்து இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் வேலையில் கமல் இறங்கி உள்ளார். பிரச்சனையை சுமூகமாக தீர்த்து, படத்தின் வேலைகளை மீண்டும் துவக்க கமல் நினைக்கிறார்.

    களத்தில் இறங்கிய கமல்

    களத்தில் இறங்கிய கமல்

    இதனால் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேசி, சமாதானம் செய்யவும் கமல் முயற்சி எடுத்து வருகிறார். பிறகு படத்தின் வேலைகளை துவக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய நினைத்துள்ளார் கமல். இரு தரப்பினரிடையே பஞ்சாயத்து பேசும் வேலையில் கமல் இறங்கி உள்ளதால் இந்த விவகாரம் விரைவில் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பல தடைகளை தாண்டியும் சிக்கல்

    பல தடைகளை தாண்டியும் சிக்கல்

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும் கமலும் நீண்ட காலமாக முயற்சித்து வந்தனர். பல தடைகளை தாண்டி படத்தின் வேலைகள் துவங்கப்பட்டும், மீண்டும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது முதலே இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    விவேக்கிற்கு பதில் வேறு ஒருவர்

    விவேக்கிற்கு பதில் வேறு ஒருவர்

    இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வந்த விவேக், சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். ஏற்கனவே இவரை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. இதனால் விவேக் கேரக்டரை ஷங்கர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு சமீபத்தில் விளக்கம் அளித்த ஷங்கர், விவேக்கிற்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து அந்த காட்சிகளை மீண்டும் எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    English summary
    Kamal Haasan has now finally decided to step in and solve Indian 2 issue to find a smooth solution for the film to process ahead.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X